'இவருக்கு பதில் இவர்' அண்ணா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர். யார் தெரியுமா?

By subhashini · 20/3/2024

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலே புது புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அண்ணா என்ற புது சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியலில் நடித்திருந்தார். தற்போது இவர் அண்ணா என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்.

அண்ணா சீரியல்:

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் செந்தில் தன்னுடைய தங்கை நால்வரையும் பாதுகாத்து வருகிறார். இவருடைய முறை பையன் தான் முத்துப்பாண்டி. அவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் செந்திலின் தங்கை ரத்னாவை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், ரத்னாவிற்கு அவரை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.

சீரியல் கதை:

என்னென்னவோ திட்டம் போட்டு ஒரு வழியாக ரத்னா கழுத்தில் தாலி கட்ட பார்க்கும்போது மாற்றி செந்திலின் இன்னொரு தங்கை இசக்கியை திருமணம் செய்து கொள்கிறார் முத்துபாண்டி. ஆனால், எசக்கி முத்துப்பாண்டியை கணவராக ஏற்று அவர் வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் இசக்கியை தலைமுழுகி விடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் செந்திலின் கடைசி தங்கை கனி வயதிற்கு வந்துவிடுகிறார். அவளுக்காக வீட்டில் விசேஷம் நடக்கிறது. தாய்மாமன் முறையில் ரத்னாவை திருமணம் செய்ய போகும் வெங்கடேசன் தான் சீர் செய்கிறார்.

சீரியலில் விலகிய நடிகர்:

இப்படி அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதுவரை அண்ணா சீரியல் 200 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அண்ணா சீரியல் இருந்து முக்கிய நடிகர் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வரலாறு இருக்கிறது. இந்த சீரியலில் வெங்கடேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் திடீரென்று வெளியேறி இருக்கிறார். இவர் வெளியேறுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

சீரியலில் கமிட்டாகி இருக்கும் புது நடிகர்:

இவர்தான் ரத்னாவை கல்யாணம் செய்து கொள்ள இருப்பவர். தற்போது இவருக்கு பதில் அஜய் பாரதி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அவருடைய புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது, இவர் ஏற்கனவே சில சீரியல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full