சௌந்தரபாண்டி ஸ்டைலில் பதிலடி கொடுத்த பாக்கியம், பதறிய பாண்டியம்மா - அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று அண்ணா. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதை தான் இந்த சீரியல். கடந்த வாரம் சண்முகம்- பரணி இருவரும் ரத்னாவின் வீட்டிற்கு சென்று இருந்தார்கள். அப்போது ரத்னாவுக்கு பிரச்சனை இருப்பது போல சண்முகத்துக்கு சந்தேகம் வந்தது. ஆனால், சண்முகத்தால் ரத்னாவிடம் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி கோவிலுக்கு போய் வீட்டுக்கு வரும் போது வைகுண்டம் கொண்டு வந்த பலகாரங்கள் சிந்தி கிடந்தது பார்த்து அதிர்ச்சி ஆகி இருந்தார்கள்.
இந்த வேலையை செய்தது சௌந்தரபாண்டி தான். பின் கனியின் மூலமாக வைகுண்டம் அவமானப்பட்ட விஷயம் தெரிந்து சண்முகம் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு கிளம்ப, அவனை பரணி தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். இருந்தும் சண்முகம் கேட்கவில்லை. நேற்று எபிசோடில் பரணி, சண்முகத்தை தடுத்து நிறுத்தி அறிவுரை சொன்னார். அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி, கோவிலில் தீபாவளிக்காக இலவச வேட்டி சேலை கொடுத்து இருந்தார்.
அண்ணா சீரியல்:
அப்போது கோவிலுக்கு வந்த சண்முகத்தை பார்த்த சௌந்தரபாண்டி, என்னாலே உனக்கும் வேட்டி வேண்டுமா? என்று கேட்க, ஆமாம் என்று சண்முகம் சொன்னார். உனக்கு வேட்டி மட்டுமில்ல ஜட்டியும் நான் தான் தரணும் என்று நக்கலாக சௌந்தரபாண்டி பேசி இருக்கிறார். உடனே சண்முகம், சௌந்தரபாண்டியன் வேட்டியை உருவி அண்டராயருடன் நிற்க வைத்தார். அடுத்து ஜட்டி தரேன்னு சொன்னீங்களே எடுத்துக்கவா? என்று சண்முகம் கேட்க, அங்கிருந்து சௌந்தரபாண்டி ஓடினார்.
நேற்று எபிசோட்:
அதன் பின் வீட்டிற்கு வந்த ஷண்முகத்தை பார்த்து பரணி, நீ பண்றதெல்லாம் காமெடியா இருந்தாலும் இதெல்லாம் இசக்கியை தான் பாதிக்கும் என்றார். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி, வேட்டி இல்லாமல் வந்ததை பார்த்த இசக்கி சிரித்தார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டி, இதுக்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான் என்று மண்ணெய்யை எடுத்து இசக்கி மீது ஊற்றி கொளுத்த போகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், இசக்கியை ரொம்ப மோசமாக பேசி சௌந்தரபாண்டி அடித்தார். பின் மண்ணெயை ஊற்றி இசக்கியை கொளுத்த தீ குச்சியை பத்த வைத்தார் சௌந்தரபாண்டி. அப்போது மாஸாக என்ட்ரி கொடுத்த சிவபாலன், தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார். இதனால் சௌந்தரபாண்டிக்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. அப்போது வந்த பாக்கியம்,இசக்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சீரியல் ட்ராக்:
பின் அவர், சிவபாலனிடம் சீம எண்ணெய்யை கொண்டு வர சொல்லி நான் சொல்றதை அப்படியே எழுது என சொல்கிறார். பாக்கியம், என் புருஷனும் அவர் அக்காவும் சேர்ந்து செய்த கொடுமையால் நான் சீம எண்ணெய் ஊற்றி கொழுத்தி கொண்டேன். அதோடு என் புருஷனையும் அவர் அக்காவையும் கொளுத்திட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெய்யை ஊற்ற, சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைகின்றார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.