அண்ணாத்த பாடலை ஓராண்டிற்கு முன்பே பாடிய ரஜினி ரசிகர் - வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 5/10/2021

உலகமுழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=VjdjNKVI0AA

இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் மியூசிக் மற்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ''அண்ணாத்த அண்ணாத்த'' என்ற முதல் பாடல் நேற்று வெளியாகி இருந்தது. இந்த பாடலை மறைந்த லெஜன்ட் பாடகரான SPB தான் பாடி இருக்கிறார் என்பது குறிப்பித்தக்கது. பொதுவாக ரஜினியின் முதல் பாடல் எஸ் பி பி பாடியதாக இருக்கும். ஆனால், இந்த பாடல் எஸ் பி பி பாடிய கடைசி பாடல் என்பதால் இந்த பாடலுக்கு மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.

https://twitter.com/Raana_official/status/1445010828525129733

இந்த பாடல் வெளியான பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ் பி பி குறித்து பதிவிட்ட ரஜினிகாந்த் '45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.' என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த பாடலை ஏற்கனவே யாரோ பாடி கேட்டது போல பலருக்கும் தோன்றி இருக்கும். அது வேறு யாரும் இல்லை தர்பார் படத்தின் போது ரஜினி ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன் பாடி ஆடிய பாடல் தான் இது.

இதை கேட்டதும், ரசிகர் பாடிய பாடலையா இப்படி காபி அடித்து இருக்கிறார்கள் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவில் பேசிய அந்த ரசிகர் தான் தலைவரின் 'அண்ணாத்த' படத்தில் அவருடன் ஆடி இருக்கிறேன் என்று கூறி இருந்தார். உண்மையில் அவர் அந்த பாடலில் ஆடி இருக்கிறாரா என்பதை படம் வந்த பிறகு பாருங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full