'அவர் அப்படி பண்ணதும் ஷாக் ஆயிட்டேன்' - ஷூட்டிங் நடுவே கிள்ளிய ரஜினி. அண்ணாத்த பட துணை நடிகை சொன்ன உண்மை.

By Rajkumar · 10/4/2024

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் விஜய்- ரஜினி தரப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் வாக்குவதம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையில் தான் இவர்கள் இருவருக்கும் மத்தியில் இந்த சண்டை பூதாகரமாக வெடித்தது. அதிலும் வாரிசு பட விழாவில் இனி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு திரைப்படத்தின் விழாவில் சரத்குமார் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் ரசிகர்கள், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி இருந்தார்கள்.

https://twitter.com/Leo27Vijai67/status/1777396857884287068

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து பதிவுகளை போட ஆரம்பித்தார்கள். அதிலும் ஜெயிலர் பட விழாவில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, காக்கா- கழுகு கதையை சொன்னார். இதில் பலரும் விஜய் தான் காக்கா என்று ரஜினி சொல்கிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்திருந்தார்கள்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலுமே பனிப்போரே நடந்தது. இதற்கு பிரபலங்கள் பலருமே விளக்கம் கொடுத்தும் இருந்தார்கள்.

அதற்குப் பின் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், என்றென்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதே போல ரஜினியும் லால் சலாம் பட விழாவில் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் அவரை என்னுடன் ஒப்பிட்டாலோ என்னை அவருடன் ஒப்பிட்டாலோ அது அவருக்கும் மரியாதை இல்லை எனக்கும் மரியாதை இல்லை என்று கூறி இருந்தார்.

https://twitter.com/romeorkr/status/1777565610047943021

தற்போது விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தாலும் இன்னமும் ரஜினி - விஜய் ரசிகர்கள் சண்டையை விட்ட பாடில்லை. இப்படி ஒரு நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்த துணை நடிகை ஒருவரிடம் ரஜினி நடந்துகொண்ட விதத்தை சுட்டிக்காட்டி ரஜினியை விமர்சித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்தவர் பிராணா

அந்த வகையில் ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் 'சாரே சாரே' காற்றே பாடலில் ரஜினி தன்னுடைய கன்னத்தை கிள்ளியாக கூறியுள்ளார். அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விஷயத்தை பேட்டியில் ரம்பா பேசியிருந்தது பெரும் வைரலானது. இதுகுறித்து பேசி இருந்த ரம்பா ' அருணாச்சலம் படப்பிடிப்பின் போது வட இந்திய நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் வந்த போது நான் அவர்களை ஹக் செய்து வெல்கம் பண்ணி இருந்தேன்.

https://twitter.com/svigneshchn/status/1742267762314224123

இதை பார்த்த ரஜினி சார் என்னை வரவழைத்து படக்குழுவினரை வரிசையாக நிக்க வைத்து என்னிடம், வட இந்தியாவில் இருந்து வந்தால் மட்டும் ஹக் செய்து மரியாதை நன்றாக பேசுகிறீர்கள். தென்னிந்தியர்களை பார்த்தால் என்ன கேவலமாக இருக்கா? குட்மார்னிங் சார், ஹாய் சார் என்று சொல்லிவிட்டு போய் ஓரமாக புத்தகம் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full