பெண்கள் உடன்கட்டை ஏறுதலுக்கு புதிய விளக்கம் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

By Dhilip Kumar · 11/9/2023

சமீப காலமாகவே சனாதனம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாமலை விதவைகள் உடன் கட்டை ஏறுதல் சனாதனத்தின் கீழ் வரவில்லை என்றும் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் அமைச்சர் உதயநிதி உடன் கட்டை ஏறுதல் எல்லாம் சனாதனத்தின் கீழ் தான் இருந்தது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் பேசி இருந்தார். அதன் பின் அவருக்கு பெரும் எதிர்ப்புகளும் எழுந்தது.

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது. திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது.

நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம்.

மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.

https://twitter.com/sunnewstamil/status/1701216528350515401

அண்ணாமலை கூறியது:

விதவைகளுடன் கட்டடை ஏறுதல் எப்போது வந்தது அதனை சனாதனம் கொண்டு வந்ததா. அந்நியர்கள் படையெடுப்பின் போது ஒரு ராஜாவோ அல்லது ஒரு வீரரோ  கொல்லப்பட்டால். அவருடைய தங்கையும் அம்மாவும் மனைவியையும் போரில் வென்ற பின் அவர்களை ஒரு பரிசு பொருளாக எடுத்துச் சென்றனர். சனாதனம் தர்மம் பற்றி புரியாதவர்கள் ஆதிக்கத்தில் வந்தவர்கள் ஒரு போரில் கொல்லப்பட்ட பின் அந்தப் பெண்களை இங்கிருந்து அவர்கள் நாட்டிற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அதனாலதான் தன் கணவர் இறக்கும்போது மனைவியும் உடன்கட்டை ஏறினால். எது சனாதனம் தர்மத்தின் கீழ் வரவில்லை. இது அந்த பெண்ணுடைய கற்பை காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு.

Tamil Behind Talkies AMP · Quick view
View full