உதயநிதியின் தலைக்கு விலை வைத்த சாமியார் குறித்து அண்ணாமலை கருத்து.
உதயநிதியின் சனாதன பேச்சுக்கு ஒரு சாமியார் ஒருவர் விலை வைத்தது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது அவ்வாறு பேசுபர் ஒரு சாமியாராக இருக்க முடியாது. அவர் ஒரு போலி சாமியாராக தான் இருப்பார் என்றும் அவர் கூறினார். சில தினங்களாகவே உதியநிதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
உதயநிதி பேசியது:
சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.
எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.
திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். என்று அவர் கூறியிருந்தார்
சர்ச்சையை கிளப்பிய சாமியார்:
உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்பட்ட நிலையில் அயோத்தியில் மடத்தில் உள்ள சாமியார் உதயநிதியின் உருவ படத்தை எரித்து அவரது கண்டனத்தை தெரிவித்தார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவருக்கு ரூபாய் 10 கோடி அளிப்பதாக அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
https://www.youtube.com/live/k_cmfYbOvCU?si=r33FRPjWn7wD7936
அண்ணாமலை விளக்கம்:
சனாதனத்தை பின்பற்றுபவர் அது போல பேசி இருக்க மாட்டார். ஒருவரின் தலையை எடுப்பதும் ஒருவரின் உயிரை எடுப்பதும் கடவுளுக்கு மட்டுமே அதை மனிதர்களால் செய்ய முடியாது. அமைச்சர உதயநிதி பேசியதற்கு அவர் தலைக்கு விலை நிர்ணயம் செய்த சாமியார் அவர் முதலில் சனாதனத்தை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பேசுபவர் நிச்சயமாக சாமியாராக இருக்க முடியாது அவர் ஒரு போலி சாமியாராக தான் இருப்பார்.அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் முதலில் சனாதனத்தை பின் பற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.