ஏ.ஆர். ரகுமானை வைத்து இவ்வாறு செய்ய வேண்டாம். தமிழகத்தின் சொத்து அவர்” – அண்ணாமலை

By S.Dhilip Kumar · 13/9/2023

ஞாயிறு அன்று நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் இசை கட்சியிலே நடந்த குளறுபடி குறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழகத்தின் சொத்து அவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் கேட்டு உள்ளார். தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் அவர். அவரை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

இதனால் இந்த முறை திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், கூட்டம் தான் ஆட்டு மந்தைகளைப் போல அதிகமாக இருந்தது. ஏழு மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு சென்றவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் எல்லாம் விற்றுவிட்டது. இருந்தாலும், இன்னும் ஆன்லைனில் டிக்கெட்டுகள் புக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் நடந்தது:

இது ஏன் என்று புரியவில்லை? அது மட்டும் இல்லாமல் 2000, 5000 என வெளியூர்களிலிருந்து செலவு செய்து வந்தவர்களுக்கு கூட கார், பைக் பார்க்கிங் என்று திருவிழா காலங்களில் வசிப்பது போல கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது ரொம்பவே வருத்தத்தை அளிக்கிறது.மேலும், விற்கப்பட்ட டிக்கெட்டுகளை எப்படி நிகழ்ச்சி ஏற்பாடாளர்கள் திருப்பியும் விற்றார்கள் என்று தான் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

அண்ணாமலை கூறியது:

நடைப்பயணத்தின் அடுத்த கட்டமாக என்ற கொடைக்கானலில் அண்ணாமலை கூறுகையில் “கொடைக்கானல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பாலிதீன் அவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து ஐந்து இடங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி வருகின்றனர் அந்தப் பணம் நகராட்சிக்கு மற்றும் அரசுக்கு சென்றடையாமல் வனத்துறைக்கு சென்றடைகிறது. அந்தப் பணத்தை வனத்துறை சரியாக கையாளுகின்றதா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு தலையிட்டு வெள்ளை அறிக்கை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதன்பின் ஏ ஆர் ரகுமான் பற்றி கூறுகையில் ஏ ஆர் ரகுமான் தமிழகத்தின் சொத்து தமிழகத்தின் பெருமை உலக அரங்கில் நிலைநாட்டியவர்.

அவரை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது ஏ ஆர் ரகுமான் வேலை என்பது இசைக்கலை மூலம் மக்களை மகிழ்விப்பது இசைக்கச்சேரியில் நடந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் என்னுடைய வீடு உள்ளது. நிகழ்ச்சிய ஏற்பாட்டாளர்களிடம் சரியான திட்டமிடல் இல்லை அந்த வழியாக முதல்வர் மு க ஸ்டாலின் சென்றார் இப்போது முதல்வர் பொதுமக்களுக்கு காவல்துறை சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் வேண்டும் சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாக பேசிய ஆ ராசா உதயநிதி சாகர் பாபு ஆகியவரை கைது செய்யாமல் முற்றுகைப் போராட்டத்திற்கு சென்ற எங்களை கைது செய்யவில்லை என்று அதிகாரிகளை காத்திருப்பதற்கு பட்டியலுக்கு தமிழக அரசு அவர்களை மாற்றி உள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full