தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். இதனால் இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். அதோடு இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். அதோடு கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது. பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார்.

Advertisement

இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் நயன்தாரா வழக்கமான தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது.

வில்லனாக சத்யராஜ் வருகிறார். கதாநாயகன் வேண்டும் என்பதற்காகவே ஜெய் இந்த படத்தில் வைத்திருக்கிறார்கள். கடைசி வரை அவர் என்ன செய்கிறார் என்று என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்ப வைத்து இருக்கிறது. அவருக்கு காதல் வசனங்களை ஆவது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவர்களுடன் படத்தில் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள்.

Advertisement

படத்தில் சைவம்- அசைவம் என்ற இரண்டு வகை உணவுகளை இயக்குனர் மையப்படுத்தி கொடுத்து இருக்கிறார். அதோடு அதில் சில முக்கிய விஷயங்களை காண்பிக்க முயற்சித்து இருக்கிறார். ஆரம்பத்தில் அசைவ உணவுகள் குறித்து வரும் காட்சிகளையும் வசனங்களையும் இயக்குனர் கொஞ்சம் கவனமாக கையாண்டு இருக்கலாம். படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. தேவையற்ற நிறைய அரசியல் வசனங்கள் வருகிறது. ஒரு சமையல் போட்டியை நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இயக்குனர் கொண்டு செல்வது கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறது.

Advertisement

ஆனால், சில வசனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற்று இருக்கிறது. ஒரு எதார்த்தமான காட்சியை கூட இயக்குனர் செயற்கை தனமாக கொடுத்திருக்கிறார். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதம்தான் சரியில்லை. பின்னணி இசையும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் அன்னப்பூரணி சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும் படம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு ஓகே

சில வசனங்கள் ஓகே

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமில்லை

குறை:

இயக்குனர் கதைகளத்தை கொண்டு சென்ற விதத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்

பின்னணி இசை ஒர்க் அவுட் ஆகவில்லை

நிறைய லாஜிக் குறைபாடுகள்

தேவையில்லாத அரசியல் வசனங்கள்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

கிளைமாக்ஸ் இல் கொஞ்சம் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் அன்னபூரணி- ருசி இல்லை

Advertisement