அந்நியன் பட குட்டி அம்பி விஜய்யின் நெருங்கிய சொந்தமா? அதுவும் அம்மா வழி சொந்தம்.

By Arun · 3/1/2024

அந்நியன் பட நடிகரும் விஜய்யும் குறித்த சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விராஜ். இவர் சென்னையை சேர்ந்தவர். நடிகர் விராஜ் அவர்கள் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த உயிரிலே கலந்தது என்ற படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விக்ரம் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அந்நியன் படத்தில் அம்பியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகர் விராஜ் நடித்திருப்பார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது.

விராஜ் நடித்த படங்கள்;

அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சென்னை 28 என்ற படத்தில் பேட் பாய்ஸ் அணியின் கேப்டனாக விராஜ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்திருந்தார்.

விராஜ் திரைப்பயணம்;

அதற்குப் பின் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். அதற்கான பட வேலைகளிலும் ஈடுபட்டார். ஆனால், அந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் விராஜும் விஜய்யும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் உறவினர்:

அதாவது, நடிகர் விராஜ் அவர்கள் டப்பிங் கலைஞர் எஸ் என் சுரேந்தரரின் மகன் ஆவார். இவர் டப்பிங் கலைஞர் மட்டும் இல்லாமல் பாடகரும் ஆவார். பின் விஜய்யின் தாய் பாடகி சோபா சந்திரசேகரின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் அவர்கள் விராஜிற்கு நெருங்கிய உறவினர் ஆவார். சொல்லப்போனால், விஜய்யின் தாய் மாமாவின் மகன் தான் விராஜ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full