விஜய்யின் லியோ படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலியூட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

Advertisement

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் தினேஷ் நடன வடிவமைப்பு செய்கிறார். மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

லியோ பாடல் வைரல்:

தற்போது இந்த நா ரெடி பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் லியோ படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

Advertisement

அனுராக் காஷ்யாப் குறித்த தகவல் :

தற்போது இவர் லியோ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே அளித்த பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும். அவர் படத்தில் இறப்பது போன்ற காட்சிகள் கிடைத்தாலும் சரி அந்த காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறியிருந்தார். தற்போது இவர் காஸ்மீரில் நடந்து கொண்டு இருக்கும் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement