'மீண்டும் மீண்டுமா'- மீண்டும் வெளியாகியுள்ள உதித் நாராயணின் மற்றொரு சர்ச்சை வீடியோ

By krithika · 6/2/2025

பாடகர் உதித் நாராயணனின் பழைய வீடியோக்களை வெளியிட்டு தற்போது நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இந்திய சினிமா உலகில் பின்னணி பாடகராக இருப்பவர் உதித் நாராயணன். இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். மேலும், இவருடைய திறமைக்காக தேசிய விருது, பத்மபூஷண், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஐந்து முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஓடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உட்பட பல மொழிகளில் 2000 மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இவர் 1980ல் பாலிவுட்டில் வெளிவந்த யுனிக் பீஸ் என்ற படத்தில் மூலம் தான் பாடகராக அறிமுகமானார். இவருடைய தனித்துவமான குரலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதோடு தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மிகப் பிரபலமாகி இருந்தது. இவரை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான். கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

உதித் நாராயண் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்ச்சையும் இவரை சுற்றிக் கொண்டிருக்கிறது. சொந்த வாழ்க்கையில் இவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இவர் 1985 ஆம் ஆண்டு தீபா என்பவரை திருமணம் செய்திருந்தார். பின் 2006 ராஞ்சனா என்பவர் தான் இவரின் முதல் மனைவி என்று கூறி மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. ஆரம்பத்தில் உதித், இதை மறுத்தாலுமே கடைசியில் ஒத்துக் கொண்டார்.

உதித் நாராயணன் செய்த வேலை:

அதாவது 1984ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற உதித், தீபா என்பவரை திருமணம் செய்து விட்டார். மேலும், சமீப காலகமாக இவர் சினிமாவில் மட்டுமில்லாமல், லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் பாடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உதித் நாராயணன் லைவ் ஷோவில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பெண் ரசிகை செல்ஃபி எடுத்தார். பின் அந்த பெண், உதித் கன்னத்தில் முத்தம் கொடுக்க சென்றார். உடனே அவர் தலையை திருப்பி உதட்டில் முத்தமிட்டு இருந்தார் உதித். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

உதித் நாராயணன் கொடுத்த விளக்கம்:

இது தொடர்பாக பேசிய உதித் நாராயணன், நான் மேடையில் பாடும்போது ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலை இருக்கும். ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதோடு ரசிகைக்கு முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம். நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். எனக்கு ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம் கிடையாது. உண்மையில் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்னுடைய கரம் கூப்பி நன்றி சொல்கிறேன். மேடையில் இருக்கும் போது இந்த தருணம் மீண்டும் வரக்கூடாது என்று நினைத்து நான் வணங்குகிறேன் என்று கூறியிருந்தார்.

மற்றொரு வீடியோ:

இந்நிலையில், பாடகர் உதித் நாராயணன் பல ரசிகைகளை முத்தமிடுவது போன்ற மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை முன்னாள் எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அதில், உதித் நாராயணனின் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் ஆரவாரத்துடன் செல்ஃபி எடுக்கக் கூடியிருக்கிறார்கள். அப்போது நீல நிற உடையிலிருந்த உதித், தன்னிடம் செல்ஃபி கேட்ட பெண் ரசிகைகளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் ஒரு பெண்ணின் உதடுகளில் முத்துமிட்ட நிலையிலும் அந்த ரசிகை சிரித்துக்கொண்டே இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full