விஷாலின் காதில் ஐ லவ் யூ சொன்னேனா? ரகசியத்தை உடைத்த அன்ஷிதா, என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 6/1/2025

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஷால் குறித்து அன்ஷிதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 92 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்று சொல்லலாம்.
அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஷால் குறித்து அன்ஷிதா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் தான் அன்ஷிதா மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த செல்லம்மா என்ற சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த அர்னவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியில் அன்ஷிதா:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அன்ஷிதா நன்றாக விளையாடி வந்தாலும் இடையில் இவர் விஷால் மீதான காதலால் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தாமல் விட்டார். விஷால் ஏற்கனவே தர்ஷிகாவை காதலிக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இருந்தாலுமே மனம் தாங்காமல் அன்ஷிதா புலம்பி கொண்டே இருந்தார். இதனால இவர் நிகழ்ச்சி விட்டு வெளிவந்து விட்டார் என்று சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிக் பாஸ் பன் லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

விஷால் காதில் சொன்னது:

அப்போது அவரிடம் நிகழ்ச்சியை விட்டு வெளி வரும்போதும் விஷாலின் காதில் ரகசியமாக சொன்னது பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதில் அன்ஷிதா, நான் ஐ லவ் யு எல்லாம் சொல்லவில்லை. அப்படி ஐ லவ் யூ சொல்வதாக இருந்தால் ஓபன் ஆக, சத்தமாக சொல்லி இருப்பேன். நான் விஷால் காதில் சொன்னதே வேறு. ஆனால், வெளியே பலர் வேற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நானும் அதை எல்லாம் பார்த்தேன். நான் விஷால் காதில் சொன்னது என்னுடைய எக்ஸ் உடைய பெயரார். அது அர்னவ் கிடையாது, விஷாலும் கிடையாது. மேலும், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை கண்டிப்பாக முத்துக்குமரன் தான் வாங்குவார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full