'ஒரே நிமிஷம் பேசுகிறேன்' அனுபமா கெஞ்சியும் மேடையை விட்டு கீழே இறங்க சொன்ன தெலுங்கு ரசிகர்கள். இதான் காரணம்

By subhashini · 10/4/2024

டில்லு 2 படத்தின் சக்ஸஸ் மீட்டில் ரசிகர்கள் செய்திருக்கும் வேலை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

https://www.youtube.com/watch?v=7mZb_RtvTak

மேலும், பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுபமா தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேஸ்வரன் குறித்த தகவல்:

அதனை அடுத்து இவர் வெப் சீரிஸ், படங்கள் என்று கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தில்லு 2(Tillu Square). ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் டிஜே தில்லு படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிருந்தது. அதனுடைய தொடர்ச்சியாக தான் தில்லு 2 படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலரில் அனுபமா பரமேஸ்வரன் முத்த காட்சிகளில் நடித்தது பரவலாக பேசப்பட்டது.

https://twitter.com/Chrissuccess/status/1777761327076823136

Tillu Square படம்:

இதனால் இந்த படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் மாடர்னாகவும், கிளாமராகவும் அனுபமா நடித்திருக்கிறார். ஏற்கனவே ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் கூட லிப் லாப் காட்சியில் அனுபமா நடித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும், இந்த Tillu Square படத்தில் சித்து ஜோன்னலகத்தா ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மாலிக் ராம் இயக்கி இருக்கிறார். சீரியஸான கதையை காமெடி பாணியில் இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

படத்தின் சக்ஸஸ் மீட்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட்டில் ரசிகர்கள் செய்த வேலை தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே தெலுங்கு சினிமாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கதாநாயகிகள் கலந்து கொண்டால் அவர்களுக்கு சரியான மரியாதையும், அங்கீகாரமும் ரசிகர்கள் கொடுப்பதில்லை. அவர்கள் மேடை ஏறினாலேயே பேச வேண்டாம், கீழே இறங்குங்கள் என்றெல்லாம் சொல்லி அவர்களுக்கான மதிப்பு தருவதில்லை.

https://twitter.com/introvert_lub/status/1777902266575704321

Tillu Square சக்ஸஸ் மீட்டில் நடந்தது:

இது சமீப காலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது தில்லு 2 படத்தினுடைய சக்சஸ் மீட்டில் நடிகை அனுபாமா மேடை ஏறி பேச சென்றார். அப்போது மேடைக்கு சிறப்பு விருந்தினராக NTR வந்த போது ரசிகர்கள் அவருக்காக கூச்சலிட்டனர். இதனால் அனுபமா நான் இரண்டு நிமிடம் பேசிகொள்ளட்டா என்று கேட்டார். உடனே ரசிகர்கள், கூச்சலிட்டு பேச வேண்டாம் பேச வேண்டாம், கீழே இறங்குங்கள் என்று கூச்சலிட்டனர். அதற்கு அனுபமா ஒரே நிமிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொன்னதற்கும் அவரைப் பேசவிடாமல் கத்திக் கொண்டிருந்தார்கள். பின் ஜூனியர் என்டிஆர் உடைய பெயரை மட்டும் சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full