மலையாள சினிமாவால் நான் நிறைய விமர்சனங்களை சந்தித்தேன் , ஆனால் - மனம் திறந்த நடிகை அனுபமா

By subhashini · 21/6/2025

மலையாள சினிமா பற்றி நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் அனுபமா அவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அனுபமா திரைப்பயணம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் இயக்கத்தில் வெளியாகி இருந்த ட்ராகன் படத்தில் அனுபமா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதை அடுத்து இவர் தில்லு ஸ்கொயர் என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பபல மொழி டங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால், இவர் மலையாள படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=ivQMTYJRjvo

அனுபமா குறித்த தகவல்:

தற்போது அனுபமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா. இந்த படத்தில் சுரேஷ்கோபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அனுபமா, மலையாள சினிமாவில் என்னை பலரும் நிராகரித்தார்கள். எனக்கு நடிக்கவே தெரியவில்லை என்றெல்லாம் ட்ரோல் செய்தார்கள். அதை எல்லாம் தாண்டி எனக்கு வாய்ப்பளித்த இந்த படத்தினுடைய இயக்குனருக்கு நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி இருந்தார். இதை பார்த்த நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா தன்னுடைய மனதில் இருந்து பேசி இருக்கிறார்.

சுரேஷ் கோபி சொன்னது:

இது முதல்முறையாக இல்லை. இதில் இருக்கும் உண்மை எனக்கு தெரியும். சிம்ரன் பிரபலமான நடிகையாக இருந்தவர். மலையாள உலகில் புறக்கணிக்கப்பட்டு விடப்பட்டவர். ஆனால், அதற்கு பின்னர் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக அவரை நடிக்க வைக்க பல முன்னணி இயக்குனர்கள் அவரை தேடி சென்றதை நான் அறிவேன். அசின், நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர்கள் தான். மலையாளத்தில் தங்கள் ஒரு கேரியை தொடங்கினார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் மற்ற மொழிகளில்தான் முன்னணி கதாநாயகிகளாக புகழ்பெற்றிருக்கிறார்கள். அனுபமாவின் வாழ்க்கையிலும் அதே நடந்து இருக்கிறது. இதுதான் கர்மா என்று கூறியிருந்தார்.

அனுபமா பேட்டி:

மேலும், இது தொடர்பாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அளித்த பேட்டியில் அனுபமா, மலையாள சினிமாவில் என் மீது அதிகமான விமர்சனங்கள் இருக்கிறது. அதனால் தான் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். இது உண்மைதான். என்னுடைய படங்களை என் அப்பா, அம்மா பார்க்கிறார்கள். அதனால் நான் கவனத்துடது தான் எனக்கு பொருத்தமான கதை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். படத்தை பார்ப்பவர்கள் என்னுடைய நடிப்பு பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் நான் கவனமாக பார்ப்பேன். இப்போது எனக்கு நல்ல நல்ல கதைகள் வருகிறது. ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படத்தில் கமிட்டாகி இருக்கிறேன். பல தடைகள் வந்தாலும் மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full