அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' மிரள வைத்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக அனுபமா பரமேஸ்வரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் லாக் டவுன். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் ஜீவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் நிகழ்ந்ததை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோயினி அனுபமா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பா சார்லி, அம்மா நிரோஷா உடன் சந்தோஷமாக தன்னுடைய வீட்டில் வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் வீட்டில் பண பிரச்சினை இருப்பதால் படிப்பு முடிந்த உடனே வேலை தேடி அனுபமா அலைகிறார். பின் இரவு நேரத்தில்
செய்யும்படியான வேலை கிடைக்கிறது. இருந்தாலும் வீட்டில் யாருமே ஒத்துக் கொள்ளவில்லை. பின் தன்னுடைய தோழியின் நண்பரை சந்திக்க அனுபமா செல்கிறார்.
அங்கு ஒரு பார்ட்டி நடக்க நடக்கிறது அதில் கலந்து கொள்ள தோழி வற்புறுத்துகிறார். இருந்தாலும் அனுபமா தவிர்க்கிறார். இருந்தாலும் தன்னுடைய தோழியின் நண்பர் வேலை வாங்கி தருவதால் அந்த பார்ட்டியில் அனுபமா கலந்து கொள்கிறார். அந்தப் பார்ட்டியில் அனுபமா ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார். அதற்கு பிறகு சில நாட்களில் அனுபாமாவிற்கு வேலையும் கிடைக்கிறது.
அந்த சமயம் பார்த்து எதிர்பாராத விதமாக அனுபமா கர்ப்பமாகிறார். அந்த கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்று தெரியாமல் ரொம்பவே அதிர்ச்சி அடைந்து உட்காருகிறார் அனுபமா. பின் இவர் வீட்டில் தெரிந்தால் பிரச்சனையாகும் என்று கருவை கலைக்க முயற்சி செய்கிறார். அந்த சமயம் பார்த்து நகரம் முழுவதும் கொரோனா தொற்று பரவி லாக் டவுன் போட்டு விடுகிறார்கள். அதற்கு பிறகு யாரும் வெளிவர முடியாத சூழல் ஏற்படுகிறது.
அந்த சமயத்தில் அனுபமா இந்த கர்ப்பத்தை கலைத்தாரா? அந்த கர்ப்பத்திற்கு காரணம் யார்? இதை எல்லாம் சமாளித்து அனுபமா வெளியே வந்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. ஒரு எளிமையான கதையை இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அனுபமா முழு படத்தையும் தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று தான் சொல்லலாம். ஒவ்வொரு காட்சிகளிலும் அவருடைய நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. இவரை தொடர்ந்து பிரச்சனையில் சிக்கிக் கொண்ட அனுபமா தவிக்கும் காட்சிகள் எல்லாம் பார்வையாளரையும் பதைக்க வைக்கிறது.
இந்த படம் அனுபமாவிற்கு ஒரு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும். இதை அடுத்து பெற்றோராக நடித்திருக்கும் சார்லி, நிரோஷாவின் அனுபவ நடிக்கும் சிறப்பு. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. முதல் பாதி நன்றாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் யூகிக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. இரண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்.
சில காட்சிகள் நாடகத் தன்மையாகவும் இருப்பது தான் படத்திற்கு பலவீனம். எதிர்பாராத ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட பின் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து மீண்டு வந்தாரா? என்ற ஒரு எளிய கதையை தான் இயக்குனர் கொடுத்திருப்பார். இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு படம். கிளைமாக்ஸ் வரும் திருப்பம் சிறப்பு. மொத்தத்தில் லாக்டவுன் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
அனுபமா நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் திருப்பம் நன்றாக இருக்கிறது
குறை:
சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது.
இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்
மொத்தத்தில் லாக்டவுன் - போராட்டம்