சிம்ரன், நயன், அசினுக்கு நடந்தது தான் அனுபமாவுக்கு நடந்து இருக்கு - சுரேஷ் கோபி ஓபன் டாக்
அனுபமாவிற்கு சப்போர்ட் செய்து நடிகர் சுரேஷ் கோபி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது. அதோடு இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார்.
அனுபமா திரைப்பயணம்:
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதுவும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்கு பின் அனுபமா அவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் இயக்கத்தில் வெளியாகி இருந்த ட்ராகன் படத்தில் அனுபமா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது.
அனுபமா குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் தில்லு ஸ்கொயர் என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால், இவர் மலையாள படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. இவர் மலையாள மொழியில் சில படங்களில் தான் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தற்போது அனுபமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா. இந்த படத்தில் சுரேஷ்கோபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=fBx3X0k1bI0
அனுபமா சொன்னது:
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அனுபமா, மலையாள சினிமாவில் என்னை பலரும் நிராகரித்தார்கள். எனக்கு நடிக்கவே தெரியவில்லை என்றெல்லாம் ட்ரோல் செய்தார்கள். அதை எல்லாம் தாண்டி எனக்கு வாய்ப்பளித்த இந்த படத்தினுடைய இயக்குனருக்கு நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி இருந்தார். இதை பார்த்த நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா தன்னுடைய மனதில் இருந்து பேசி இருக்கிறார். இது முதல்முறையாக இல்லை.
https://www.youtube.com/watch?v=LJ__Fv6mfy8
சுரேஷ் கோபி சொன்னது:
இதில் இருக்கும் உண்மை எனக்கு தெரியும். சிம்ரன் பிரபலமான நடிகையாக இருந்தவர். மலையாள உலகில் புறக்கணிக்கப்பட்டு விடப்பட்டவர். ஆனால், அதற்கு பின்னர் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக அவரை நடிக்க வைக்க பல முன்னணி இயக்குனர்கள் அவரை தேடி சென்றதை நான் அறிவேன். அசின், நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர்கள் தான். மலையாளத்தில் தங்கள் ஒரு கேரியை தொடங்கினார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் மற்ற மொழிகளில்தான் முன்னணி கதாநாயகிகளாக புகழ்பெற்றிருக்கிறார்கள். அனுபமாவின் வாழ்க்கையிலும் அதே நடந்து இருக்கிறது. இதுதான் கர்மா. இது நிச்சயம் நடக்கும். அனுபமாவிற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.