சினிமா வாய்ப்பு கேட்டு மிரட்டிய இளைஞர், மும்பையை விட்டு வெளியேறுகிறாரா அனுராக் காஷ்யப்? பின்னணி இது தான்

By subhashini · 7/3/2025

பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருந்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கி இருந்த “லியோ” என்ற படத்தில் அனுராக் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்தது.

அனுராக் குறித்த தகவல்:

தற்போது அனுராக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாகவே நடிகர் அனுராக் காஷ்ய அவர்கள் சினிமா குறித்தும் , அரசியல் குறித்தும் வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை கூறி வருவதால் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதில் அவர், பாலிவுட் சினிமா டாக்சிக்காக மாறிவிட்டது. அதனால் அவர்களிடம் இருந்து தூர விலகி இருக்க விரும்புகிறேன். 500, 1000 கோடி படங்களை எடுப்பதில் தான் அவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

அனுராக் பேட்டி:

அழுத்தமான கதையம்சம் கொண்ட கிரியேட்டிவிட்டி சூழலெல்லாம் இங்கு இல்லை. தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. இப்போது என்னால் பரிசோதனை சார்ந்த முயற்சிகளை கூட எடுக்கவே முடியவில்லை. அவர்கள் லாபத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள். உங்களுக்கு இப்படியான படங்களை எடுக்க வேண்டும் என்று தோன்றினால் படங்களை எடுக்காதீர்கள் என்று நான் அவர்களிடமே சொன்னேன். ஒரு படம் உருவாவதற்கு முன்பே அதை எப்படி வியாபாரமாக்க வேண்டும் என்று தான் யோசிக்கிறார்கள். ஆனால், அந்த கதை மக்களுக்கு போய் சேருமா? என்று யோசிக்க மாட்டார்கள்.

பாலிவுட் சினிமா பற்றி சொன்னது:

அதனால் படம் இயக்கும்போதே அதற்கான மகிழ்ச்சியும் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தான் நான் முற்றிலுமே பாலிவுட் சினிமாவில் இருந்து விலகுகிறேன். பாலிவுட்டில் நான் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்தியாவில் பிறந்திருப்பேன். அங்கு தான் எனக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அங்கு என்னை மதிக்கிறார்கள். மேலும், வேலை இல்லாத நேரத்தில் நான் தென்னிந்தியாவிற்கு சென்று விடுவேன். மும்பையில் இருந்தால் என்னுடைய நேரம் வீணாகப் போகிறது. தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் நான் சந்திக்க வேண்டி இருக்கிறது.

இளைஞர் செய்த வேலை:

எல்லோருக்கும் மும்பையில் உள்ள என்னுடைய வீட்டின் அட்ரஸ் தெரியும். நான் எல்லோரையும் இயல்பாக சந்திப்பவன். அதனாலேயே வாய்ப்பு கேட்டு என் வீட்டின் முன்பு வரிசையாக நிற்கிறார்கள். ஒரு முறை ஒரு இளைஞர், என்னுடைய வீட்டு வாசலில் நின்று, என் தந்தை இறந்துவிட்டார். எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று ரொம்பவே தொந்தரவு செய்து இருந்தார். அந்த நேரத்தில் நானே ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன். அவ்வளவு பொறுமையாக எடுத்து சொல்லியுமே அந்த இளைஞன் நகரவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர் என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வாய்ப்பு கேட்டு அலுவலகம் வரலாம். ஆனால், வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதெல்லாம் சரியே கிடையாது. அதனாலேயே நான் மும்பை வீட்டில் இருப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full