பாலிவுட்டில் என்னை புறக்கணிக்கிறார்கள், ஏன்னா - இயக்குநர் அனுராக் காஷ்யப் வேதனை
பாலிவுட் சினிமா பற்றி அனுராக் காஷ்யப் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனுராக் காஷ்யப்.
இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருந்தது. இதை அடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கி இருந்த “லியோ” படத்தில் அனுராக் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது.
அனுராக் திரைப்பயணம்:
இதை அடுத்து கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக அனுராக் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்தது. இதை அடுத்து அனுராக் நடித்த Rifle Club படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அனுராக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சினிமா தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுராக் காஷ்யப், நான் இந்தி படங்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.
அனுராக் காஷ்யப் பேட்டி:
நான் முதன்முறையாக மலையாள படங்களை தான் நிறைய பார்க்க ஆரம்பித்தேன். ரைஃபில் கிளப் படப்பிடிப்பிற்கு சென்றபோது அது எனக்கு ஒரு விசித்திரமாக இருந்தது. அதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. பல இயக்குனர்கள் என்னுடைய கென்னடி படத்தின் திரையுடலுக்கு வந்திருந்தார்கள். ஆனால், இந்தி திரைப்படத்துறையில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. என்னை அவர்கள் தொடர்ந்து தவிர்த்துக் கொண்டே இருந்தார்கள். காரணம், அவர்கள் என்னை ஒரு கெட்ட செய்தியாக தான் பார்க்கிறார்கள்.
பாலிவுட் சினிமா பற்றி சொன்னது:
அவர்கள் என்னுடன் சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இங்கு தென்னிந்தியாவில் என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள். நாங்கள் உங்களுடைய படங்களை பார்த்திருக்கிறோம், நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். மேலும், என்னுடைய குடிப்பழக்கத்தை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். என்னுடைய மனசோர்வை பற்றியும் பேசுகிறார்கள்.
அனுராக் காஷ்யப் ஆதங்கம்:
நீங்கள் உங்கள் வழியில் இருந்து மாறுகிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது என்னிடம் மீட்பவர்களாக வருகிறார்கள். தென்னிந்தியாவில் இந்த அன்பை எந்த முடிவும் இல்லாமல் நான் உணர்ந்தேன். அது என்னுடைய குடிப்பழக்கத்தையோ அல்லது வேறு எதையுமே நினைவூட்டவில்லை. நானாகவே குடிப்பதை நிறுத்திவிட்டேன். தற்போது எழுதவும் உடற்பயிற்சி செய்யவும் தொடங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.