இனி 10 நிமிஷம் என்னிடம் பேச லட்ச கணக்கில் பணம் கொடுக்கனும்- கோபத்தின் உச்சத்தில் நயன்தாரா பட நடிகர்

By subhashini · 24/3/2024

இனி பத்து நிமிஷம் என்னிடம் பேச லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று கோபமாக அனுராக்ஷ்யப் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு இவர் எழுதி, இயக்கி வெளியாகியிருந்த படம் கென்னடி.

இந்த படத்தில் ராகுல் பட், சன்னிலியோன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இந்தி மொழியில் நியோ-நோயர் திரில்லர் பாணியில் வெளியாகியிருந்தது. அதோடு இந்த படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்தது விக்ரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சமீபத்தில் தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கி இருந்த “லியோ” என்ற படத்தில் அனுராக் நடித்து இருந்தார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ லோகேஷ் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

அனுராக் காஷ்யப் பதிவு:

இந்த நிலையில் அனுராக் காஷ்யப் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், சினிமா படங்கள் சம்பந்தமாக என்னை சந்திக்க பல பேர் வருகிறார்கள். புது முகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நான் சுமாரான படங்களை எல்லாம் ஆதரவு கொடுத்து ஊக்குவித்தேன். க்ரியேட்டிவ் ஜீனியஸ் என்று நினைத்து தான் இதையெல்லாம் செய்தேன். இனி என்னுடைய நேரத்தை செலவிட நான் விரும்பவில்லை.

சினிமா குறித்து சொன்னது:

மேலிம், இனி 10 முதல் 15 நிமிடம் என்னை சந்தித்து பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயும், அரை மணி நேரம் என்றால் 2 லட்சம் ரூபாயும், ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாயும் பணம் கொடுத்தால் தான் பேச முடியும். இந்த மாதிரி சந்திப்புகளில் நான் என்னுடைய நேரத்தை நிறைய வீணடித்து விட்டேன். இனி உங்களால் இந்த பணத்தை கொடுத்து பேச முடியும் என்றால் என்னை அழையுங்கள் இல்லையென்றால் விலகிருங்கள் என்று ஆக்ரோஷமாக பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full