அம்பானி வீட்டு திருமணம் ஒரு சர்க்கஸ் மாதிரி இருக்கு- அனுராக் காஷ்யப் மகள் செய்த விமர்சனம்

By Rajkumar · 11/7/2024

அம்பானி வீட்டு திருமணத்தை விமர்சித்து நடிகர் அனுராக் ரஷ்யா மகள் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை தான் ஆனந்த் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. தற்போது திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் இந்த விழா தொடங்கப்பட்டது.

முகேஷ் அம்பானி மகன் திருமணம்:

இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண், ரஜினி, இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது திருமண வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

திருமண நிகழ்வுகள்:

நாளை வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரிலும் ,வெளிநாடுகளிலும் திருமணத்திற்கு முந்திய கொண்டாடுங்கள் நடைபெற்றிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே சங்கீத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் மெஹந்தி விழா நடைபெற்றது. இதுவும் கோலாகலமாக நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் அம்பானி வீட்டு திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல பிரபலங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

திருமணம் குறித்த தகவல்:

இவர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் அம்பானி. மேலும், 12 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது. இப்படி சோசியல் மீடியா முழுவதும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யாப் மகள் ஆலியா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.

அனுராக் மகள் ஆலியா பதிவு:

அதாவது, அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள அனுராக் மகள் ஆலியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், அதில் அவர் கலந்து கொள்ள மறுத்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக அவர், அம்பானி வீட்டு திருமணம் என்பது ஒரு திருமணமே இல்லை. அது ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி. என்னையும் அவர்களுடைய திருமண விழாவிற்கு விளம்பரம் செய்வதற்காக தான் அழைக்கிறார்கள் என்று தெரியும். அதனால் தான் நான் கலந்து கொள்ள மறுத்து விட்டேன். பணத்திற்காக திருமண நிகழ்ச்சிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது. பணக்காரர்கள் தங்களிடம் அதிக பணம் இருக்கிறது என்பதற்காகத்தான் இது எல்லாம் செய்கிறார்கள். ஆனால், அதை வைத்து என்ன செய்ய முடியும்? என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full