திருப்பதியில் கீர்த்தி சனோனை ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநில பா ஜ கே பிரபலம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது.

பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான். ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ‘ஆதிபுருஷ் ‘ படத்தில் நடித்து இருக்கிறார். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

Advertisement

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக வெளியான படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தன. படத்தின் காட்சிகள் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஆனாலும் இப்போதும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. இருப்பினும் இதன் வியாபாரம் பல கோடிக்கு விற்று இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மீண்டும் இந்த படம் கேலிக்கு வழிவகுத்துள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல விதமான விமர்சனங்கங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் படம் வெற்றியடைய படக்குழு கோவில் கோவிலாக சென்று வேண்டி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கீர்த்தி சனோன் மேலும் சில படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்துவிட்டு நடிகை கீர்த்தி சனோன் கிளம்பும் போது முதலில் பிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பிய ஓம் ராவத் பின்னர் அவரை கட்டி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ ரசிகர்கள் பலர் கோவிலுக்குள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும், கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் படம் வெளியில் வராது என ஆந்திர பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் பேட்டியளித்துள்ளார். இதனால் ஆதிபுருஷ் படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement