தன்னுடைய காதல் கதையை முதன்முதலாக மனம் திறந்து அபர்ணா தாஸ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருந்த Njan Prakashan என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிருந்த பீஸ்ட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகியிருந்த டாடா படத்தில் ஹீரோயினியாக அபர்ணா நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்ட டாடா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தெலுங்கில் இவர் Adhikesava என்ற படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

தீபக் பரம்போல்- அபர்ணா தாஸ் திருமணம்:

இந்த நிலையில் அபர்ணா தாசிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர் தீபக் பரம்போல் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் தீபக் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல்-அபர்ணா தாஸிற்கு கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி Vadakanchery என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அபர்ணா தாஸ் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அபர்ணா தாஸ் தன்னுடைய காதல் கதை குறித்து சொன்னது, நாங்கள் இருவருமே முதன்முதலாக வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தான் பார்த்துக் கொண்டோம். அப்போது சாப்பிட்டு முடித்து கை கழுவ நான் சென்றிருந்தேன். அங்கு வந்த தீபக் என்னை பார்த்து வணக்கம் சொன்னார். அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதோடு நான் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன். அதற்குப் பிறகு மனோகரம் என்ற படத்தினுடைய சூட்டில் தான் நாங்கள் இருவருமே சந்தித்துக் கொண்டோம். அப்போது என்னை தெரிகிறதா? என்று நான் கேட்டேன்.

Advertisement

காதல் ப்ரோபோஸ்:

தீபக் ஞாபகம் இல்லை என்று சொன்னார். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். நாளடைவில் எங்களுடைய நட்பு காதலாக மாறியது. தீபக் தான் என்னிடம் காதலை முதலில் சொன்னார். அவர், என்னோட வங்கி கணக்கில் இவ்வளவுதான் இருக்கிறது. நான் அடிக்கடி கோபப்படுவேன். பட வாய்ப்பு இல்லை என்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். இருந்தாலும் இருக்கும் வரை உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ப்ரொபோஸ் செய்தார்.

Advertisement

திருமணம் குறித்து சொன்னது:

அவர் செய்த ப்ரொபோஸ் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியது. அப்போதே நான் ஓகே சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு இரு குடும்பத்தினரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டோம். அதற்குப் பின் இருவருமே அடிக்கடி அவுட்டிங்காக வெளிநாட்டிற்கு போனோம். எங்களுடைய புகைப்படத்தை யூடியூப்பர் ஒருவர் வெளியிட்டார். இருந்தாலும் அதை பெரிதாக யாரும் கவனிக்காததால் எங்கள் காதல் பற்றி யாருக்குமே தெரியவில்லை ரகசியமாக இருந்தது என்று கூறி இருக்கிறார்.

Advertisement