அந்த புலி ஒரு குழந்தையை ஸ்பாட்லே கொன்னுடுச்சி - அபூர்வ சகோதர்கள் இயக்குனர் சொன்ன ஷாக்கிங் தகவல்.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் கமலஹாசன். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே என்னவோ இவருக்கு உலக நாயகன் என்ற பெயர் வந்தது இவரின் வித்தியாசமான நடிப்பு திறமையின் மூலம் சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள்.
https://www.youtube.com/watch?v=EreHwqo5M1I&t=1436s
இந்த படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. உலக திரைப்பட வரலாற்றிலேயே குள்ள தோற்றம் போட்டு நடித்தவர் கமலஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்த படத்திற்காக இவர் நிறைய விருதுகளை வாங்கி உள்ளார்.
இதில் அப்புவாக வரும் குள்ளக் கமலை எப்படி குள்ளமாக காண்பித்தார்கள் என்று இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்தே தெரியவந்தது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இந்த படத்தில் வரும் புலி குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது, அந்த காலத்தில் Cg எல்லாம் கிடையாது. அதே போல மானிடர் கூட கிடையாது அந்த சமயத்தில் என்ன நடிக்கிறோமோ அதான்.
https://www.youtube.com/watch?v=cIXbLn73vds
அந்த வகையில் அந்த படத்தில் வரும் புலி, அந்த காட்சியில் நடிகர் கமல் முட்டி வரை புதைக்கப்பட்டு இருந்தார். அந்த புலியின் ட்ரைனர் என் அருகில் இருந்தார். அந்த ஷாட் எடுக்கும் போது தான் மேனேஜர் கல்கத்தாவில் நடந்த ஒரு விஷயத்தை சொன்னார். அந்த புலி, சர்க்கஸில் இருக்கும் போது ஒரு குழந்தை ஒன்று திடீரென்று ஓடி போகும் போது அந்த புலி அந்த குழந்தை மீது பாய்ந்து அந்த குழந்தைக்கு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.