முதல்வரின் அதிரடி திட்டம் - அன்றே கணித்த அஜித். ட்ரெண்டாகும் ஹேஷ் டேக். தற்போது வைரலாகும் பாடல்.

By Rajkumar · 19/8/2021

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்படி ஒரு நிலையில் அன்றே கணித்தார் அஜித் என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் அதிகம் பரவி வருகிறது.

https://twitter.com/Pagaivan5/status/1428158225023569922

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழத்தின் முதலமைச்சராக பதியேற்றார் தி மு க தலைவர் ஸ்டாலின்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சியின் தொடர்ச்சியாக பல்வேரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு திட்டமாக  'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்கிற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதுநாள் வரை பெரும்பாலான கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தனர்.

இதையும் பாருங்க : ஜார்ஜ் குட்டி நிண்ட பெண் குட்டிய நோக்கு - கிளாமர் உடையில் இணையத்தை கலங்க வைத்த திரிஷ்யம் பட நடிகை.

ஆனால், அணைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான், மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில்  'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்தை நடைமுறைபடுத்தியதோடு  58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

https://twitter.com/BennetKameshs/status/1428182716713893897

மேலும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிரான வழக்கில் இன்னும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் பலரும் பில்லா படத்தில் இடம்பெற்ற முருக பாடலுடன் ஒப்பிட்டு அன்றே கணித்தார் அஜித் என்று பதிவிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=OvGIvsWTGF4

பில்லா படத்தில் இடம்பெற்ற 'சேவல் கொடி' என்ற பாடலில் இடம்பெற்ற  “தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?'' என்ற வரிகள் வரும் பாடல் பகுதியை மட்டும் இணையவாசிகள் பகிர்ந்து பெருமைக் கொள்கின்றனர். மேலும் #அன்னைத்தமிழில்அர்ச்சனை என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full