வெண்ணிலா கபடிகுழு திரைப்பட நடிகரான ஹரி பைரவன் வெகு நாளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் காலமாகினார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் காமெடி நடிகர் அப்புக்குட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு . இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில்நடித்திருந்தார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடுப் சேனல் நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள். அதில் அவருடைய மனைவி எடுத்து வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் நடந்தது. நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை இருந்தது. என் கணவர் ஹரி என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

Advertisement

நடிகர் ஹரி நிலை குறித்து மனைவி அளித்த பேட்டி:

இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை விடாமல் நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சென்றேன். ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். இருந்தும் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தார். அதோடு அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது. அதனால் அவர் கை,கால் எல்லாம் வீங்கி போனது

கடைசி வரை போராடிய மனைவி :

இன்னும் ஆறு மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் என்ற இருந்தால் மட்டும் போதும். அதற்காக தான் நான் போராடினேன். என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது என்று கண் கலங்கியபடி கூறி இருந்தார் ஹரி மனைவி. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

வருத்தம் தெரிவித்த அப்புக்குட்டி :

நடிகர் ஹரியின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் மறைந்த ஹரியுடன் நடித்திருந்த நடிகர் அப்புக்குட்டி ஒரு வீடியோ பதிவின் மூலம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில் நம்முடைய வெண்ணிலா கபடி குழு பைரவன் இன்று நம்முடன் இல்லை. அந்த திரைப்படம் எங்களுடைய வாழ்க்கையே மாற்றும் என்று நினைத்தோம் அதே போல, எங்களுடைய வாழ்க்கையும் மாறியது, பெரிய பெயரும் கிடைத்து. ஆனால் அப்படியொரு எண்ணத்தில் இருந்த ஒருவர் நம்முடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

Advertisement

2 நாள் முன்னர் கூட நன்றாகத்தான் இருந்தார் :

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தை போலவே குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் அவருடன் நடித்தது என்னால் மறக்க முடியாது. எல்லோரிடமும் அன்புடன் விளையாட்டு தனமாக இருப்பர், ஏதாவது மனக்கசப்பென்றால் வெளியில் சொல்லிவிடுவார், அதேபோல கோபம் வந்தால் கோபத்தை கட்டி விடுவார் அப்படி அன்பாக இருப்பர். நான் இரண்டு நாள் முன்பு கூட தொலைபேசியின் மூலம் அவரது குடும்பத்துடன் பேசினேன். அப்போது நன்றாகத்தான் இருக்கிறார், கொஞ்சம் நடக்கத்தான் செய்யவேண்டும் மற்றபடி தெம்பாகத்தான் இருக்கிறார் என்று கூறினார்கள். நானும் அவர் நன்றக இருப்பர் என்று நம்பினேன் ஆனால் அதையும் மீறி அவர் நம்மை விட்டு மறைந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று அப்புக்குட்டி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார்.

Advertisement