'2வது வரை இங்க தான் படிச்சேன்' - தான் படித்த பள்ளியின் நிலையை அறிந்து அப்புக்குட்டி செய்த உதவி.
தான் படித்த பள்ளிக்கு நடிகர் அப்புக்குட்டி வழங்கி இருக்கும் சீர்வரிசை தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 'தம்பி மயில்வாகனம்' என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் அப்புகுட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புகுட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த மறுமலர்ச்சி என்ற படத்தின் மூலம் தான் நடிகர் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் அழகிய தமிழ் மகன், ஒன்பது ரூபாய் நோட்டு, வெண்ணிலா கபடிகுழு, மதராசபட்டினம், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன், மரியான், வீரம், வேதாளம் போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், இவர் கதாநாயகனாக முதன் முதலாக அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அப்புக்குட்டி குறித்த தகவல்:
இந்த படம் தேசிய விருதையும் வாங்கியது. அதன் பின் அப்புகுட்டி அவர்கள் பல படங்களில் நடித்து இருந்தாலும் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. இறுதியாக இவர் வாழ்க விவசாயி என்ற படத்தில் நடித்து இருந்தார். இயக்குனர் பி எல் பொன்னி மோகன் இயக்கத்தில் கே கதிரேசன் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.
https://www.youtube.com/watch?v=nKgoQb7J8o4
அப்புக்குட்டி நடிக்கும் படம்:
தற்போது இவர் ராஜி சந்திரா இயக்கத்தில் ஹீரோவாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய பள்ளிக்காக அப்பு குட்டி செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அப்புகுட்டியினுடைய சொந்த ஊர் நாதன் கிணறு. தற்போது அந்த ஊரில் கோவில் நடைபெற்று இருக்கிறது. இதற்காக அப்பு குட்டி சென்று இருக்கிறார்.
அப்புக்குட்டி செய்த உதவி:
மேலும் விழாவை ஒட்டி தன்னுடைய சொந்த ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு ஊர் மக்களுடன் சேர்ந்து அப்புகுட்டியும் சீர் வரிசை செய்து இருக்கிறார். அதில் மேசை, கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி தந்திருக்கிறார். கிட்டத்தட்ட 11 லட்சம் செலவில் இந்த பொருள்களை தந்திருக்கிறார். இது தொடர்பாக அப்பு குட்டி, என்னுடைய சொந்த ஊரான நாதன் கிணறு அரசு ஆரம்பப் பள்ளியில் தான் நான் இரண்டாம் வகுப்பு வரை படித்தேன்.
அப்புக்குட்டி அளித்த பேட்டி:
பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் உடைய எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. இதனால் எங்கள் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை எல்லாம் வழங்கி இருக்கிறோம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் தான் அரசு பள்ளியில் படிப்பவருடைய எண்ணிக்கை அதிகம் ஆகும் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார். சமீபத்தில் தான் அப்புக்குட்டி தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.