சிக்ஸ் பேக் கலாசாரமே அவரால் தான் உருவாச்சு - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்

By subhashini · 21/8/2025

அஜித் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருக்கும் சுவாரசிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார் போன்ற பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவர் படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். மேலும், ஒரு சிறிய இடைவெளிக்கு தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் குறித்த தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது., மேலும் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி:

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் அஜித்-கஜினி படம் குறித்து ஒரு சுவாரசிய தகவலை கூறியிருக்கிறார். அதில் அவர், முதலில் மிரட்டல் என்று தான் படத்திற்கு பெயர் வைத்தோம். அதற்கு பிறகு தான் அந்த படம் கஜினியாக பெயர் மாற்றப்பட்டது. மிரட்டல் படத்திற்காக அஜித் சார் சஞ்சய் ராமசாமியாக நடிப்பதாக இருந்தது. ரெண்டு நாள் ஷூட்டிங்கும் நடந்தது. அந்த ரெண்டு நாள் காட்சிகளும் இன்னும் என்னிடம் இருக்கிறது.

அஜித் பற்றி சொன்னது:

அதை பார்த்தால் இன்னும் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். அஜித் சார் தான் இந்த படத்திற்கு சிக்ஸ் பேக் வைக்கலாம் என்று ஐடியா சொன்னார். அப்போ சிக்ஸ் பேக் என்ற கான்செப்ட் கிடையாது. நாளடைவில் தான் நான் சூர்யா, ஆமிர்கானிடம் சிக்ஸ் பேக் வைக்க சொன்னேன். அதற்கு காரணமும் அஜித் சார் தான். அதற்குப் பிறகுதான் சிக்ஸ் பேக் என்ற கலாச்சாரமே உருவானது என்று கூறி இருக்கிறார். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியிருந்த படம் தான் கஜினி.

கஜினி படம்:

இந்த படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதை அடுத்து 2008 ஆம் ஆண்டில் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் கஜினி படம் வெளியானது. அதையும் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இந்தியிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

behindtalkies AMP · Quick view
View full