விஜய்யின் ’சர்கார்’ பட போஸ்டரை கிழித்தபோது நான் - மேடையில் எமோஷனலான ஏ.ஆர் முருகதாஸ்

By subhashini · 12/5/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சற்றென்று மாறுது வானிலை. இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பாபு விஜய் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மே 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருந்தது. அப்போது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சர்க்கார் பட சமயத்தில் நடந்த விஷயம்தான் இது. படத்தினுடைய சூட்டிங் முடிந்த பிறகு நாங்கள் எல்லோருமே பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தோம்.

ஜெய் படம்:

நான் ஹீரோயின் கருப்பையா ஆகியோர் பேட்டியில் இருந்தோம். அப்போது பாபு விஜயை, கருப்பையா சார் அழைத்தார். விஜய் பாபு பேட்டியில் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று சொன்னார். உடனே பாபு விஜய், பேட்டியில் என்ன பேசுவது என்று சொல்லிக் கொடுத்தார். இடைவெளியில் என்னை சந்தித்த அவர், சார் நீங்க என்னை விஜய் பாபு என அழைக்கிறீர்கள். என் பெயர் பாபு விஜய் என்று சொன்னார். உடனே கருப்பையா அதைக் கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

முருகதாஸ் பேட்டி:

மீண்டும் பேட்டி தொடங்கியது. கருப்பையா சார் பலமுறை பாபு விஜய் பெயரை சொல்லி சொல்லி பேசினார். படத்தினுடைய இயக்குனரான என் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை. பேட்டி முடிந்ததும் அவரிடம் நான் இதை கேட்டேன். விடுங்க சார், ஆற்றில் போற தண்ணியே அவன் அவன் அண்டால குடிக்கிறான். நான் ஒரு சொம்புல தானே அள்ளுகிறேன் என்று சொன்னார்.

https://www.youtube.com/watch?v=mNAWvF1KMro

சர்க்கார் சம்பவம்:

இப்படி தான் அவர் எனக்கு நெருக்கமானார். என்னுடைய மோசமான காலத்தில் கூட பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். சர்கார் ரிலீஸ் போது அந்த போஸ்டர் எல்லாம் கிழித்தார்கள். நானும் அவரும் காரில் உட்கார்ந்து அழுது இருந்தோம். இப்படி நெருக்கடியான காலத்திலும் அவர் என்னோடு இருந்தவர். இந்த நிகழ்ச்சியில் என்ன பேசுவது என்று பாபுவை விஜயை கேட்டபோது அவர்தான் கருப்பையா சம்பவத்தை நினைவு படுத்தினார். இதுதான் அவருடைய திறமை. என் இடம் இருந்த 12 உதவி இயக்குனர்கள் இன்று இயக்குனர்களாக இருக்கிறார்கள். இன்று பாபு விஜயின் நாள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full