சண்டை போட எனக்குத் தகுதி கிடையாது - தன் மகள் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
தன் மகள் கதீஜா பற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார்.
பின் இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார். தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார்.
ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:
முதல் படத்திலேயே இவரின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான்-மகள் சர்ச்சை:
இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்களுக்கு முன்பு ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மகள் கதீஜா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. காரணம், கதீஜாவை புர்கா அணிய வேண்டும் என்று ஏ.ஆர் ரகுமான் கட்டாயப்படுத்துகிறார் என்று எல்லாம் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது.
ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:
இது தொடர்பாக சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்தின் பாட்காஸ்ட்டில் ஏ.ஆர்.ரகுமான், பொய்யான வதந்திகள், சர்ச்சைகளைப் பற்றி சமாளிக்கும் அளவிற்கு என்னுடைய மகள் மன உறுதியோடு இருப்பதை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. பொது வாழ்க்கையில் இருப்பதற்கான முடிவை நாம் தான் தேர்வு செய்கிறோம். பணக்காரர் முதல் கடவுள் வரை என எல்லோரையுமே விமர்சிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
மகள் பற்றி சொன்னது:
அந்த வகையில் நான் மட்டும் விதிவிலக்கல்ல. என் மகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதில் பிரச்சனை என்னவென்றால் அவருடன் சண்டை போடுவதற்கான தகுதி தான் எனக்கு கிடையாது. அவர் ரொம்ப தெளிவாக எழுதப்பட்ட இரண்டு பக்கம் ஈமெயிலை எனக்கு அனுப்புவார். உங்களால் அதை பாராட்டத்தான் முடியும். அவரிடம் 'அப்பாவுக்கு என் கடிதங்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும், இந்த புர்கா சர்ச்சையின் போது கூட என் மகள், நான் அணியும் உடைக்கோ, என் வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகளுக்கோ என் பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னதாக கூறியிருந்தார்.