நான் என்ன கசாப்பு கடை நடத்துறேனா? கோபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - நடந்தது என்ன?
தனது பட்டப்பெயர் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் கூறி இருக்கும் விசயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார்.
பின் இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். அதன் பின் பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார். தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது.
ரகுமான் இசைப்பயணம்:
அதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். அதோடு இரு ஆஸ்கர் குவித்த பெருமையும் இவரை தான் சேரும். தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.
ரகுமான் படங்கள்:
அந்த வகையில் தற்போது இவர் தக்கலைப் என்ற படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சிம்பு-கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.
ரகுமான் பட்டப்பெயர்:
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும், ஏ.ஆர் ரகுமான் இயக்கிய லி மஸ்க் படம் உலக அளவில் மிகப் பிரபலமாகி இருக்கிறது. இதை அடுத்து ரகுமான் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கம் வேளையில் இறங்கி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=xtUsyFceS7E
கோபத்தில் ரகுமான் சொன்னது:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் டிடி, ஏஆர் ரகுமானை பார்த்து பெரிய பாயின் பாட்டு யாருக்கு தான் பிடிக்காது? என்று சொல்லியிருந்தார். உடனே ஏ ஆர் ரகுமான், எனது பெரிய பாயா? அப்படி சொல்லாதீங்க, எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார். அதற்கு டிடி, இதுதான் உங்கள் பட்டப்பெயர். இதைப்பற்றி உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏ.ஆர். ரகுமான், அதெல்லாம் வேண்டாம். சின்ன பாய், பெரிய பாய் என்று சொல்வதற்கு நான் என்ன கசாப்பு கடையை வைத்து நடத்துகிறேன். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.