இனி இசையமைப்பதை நிறுத்த போகிறார் ஏ. ஆர். ரஹ்மான்? வதந்திக்கு பதிலடி கொடுத்த அவர் மகள் கதிஜா
ஏ.ஆர். ரகுமான் குறித்த சர்ச்சைகளுக்கு அவர் மகள் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் இந்த படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன்:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைப்பதற்காக இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்ததே. இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்தி தான் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி அறிக்கை:
இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வழியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறி இருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் குறித்த செய்தி:
அதைத்தொடர்ந்து, சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது விவாகரத்து செய்தியை உறுதி செய்து இருந்தார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஏ.ஆர் ரகுமானின் விவாகரத்து செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர். ரகுமான் குறித்த சர்ச்சைகளுக்கு அவள் மகள் கொடுத்த பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏ.ஆர். ரகுமான் ஒரு வருடத்திற்கு இசையமைப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று செய்திகள் பரவிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் மகள் பதிலடி:
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது தொடர்பாக ரகுமானின் மகள் கதீஜா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், என் தந்தை குறித்து வந்த செய்திகள் எல்லாமே பொய். ஏன் இப்படி எல்லாம் தேவையில்லாமல் வதந்திகளை பரப்புகிறீர்கள். என்னுடைய அப்பா இசையமைப்பதில் இருந்து எந்த ஒரு பிரேக்குமே எடுத்துக் கொள்ளவில்லை என்று கோபமாக கூறி இருக்கிறார்.