தமிழ் சினிமாவை உலக மக்களுக்கு எடுத்துச்சென்று தன்னுடைய இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது “லாம் சலாம்”என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஜஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார்.இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்தினை லைகா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இப்படத்திற்கு இசையமைப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார்.இப்படி இசையமைத்து கொண்டே சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறார். இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இவர்களில் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இருவரும் கார் அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

Advertisement

மூத்த மகள் கதீஜா ரகுமான் :

இவர்கள் இருவரில் கதீஜா ரகுமான் இசைக்கலைஞர் மற்றும் ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளை இயக்குனராக உள்ளார். மற்றவர்கள் இயக்குனர், பாடல் , தயாரிப்பு என பல துறைகளில் கலக்கி வருகின்றனர். மேலும் கதீஜா ரகுமான் தன்னுடைய 13 வயதிலேயே ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் மூன்று மொழிகளில் எஸ்.பாலாசுப்பிரமணியுடன் இணைந்து “புதிய மனிதா பூமிக்கு வா” என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் பிரபல ஊடகம் ஒன்றிற்க்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார்.

ரஜினி மீது மரியாதை இருக்கிறது :

அந்த பேட்டியில் இவர் சிறுவயதாக இருக்கும்போது ரஜினிகாந்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இவருடைய கையில் இருந்த நீங்கள் இவருடைய படத்தில் பாடுவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இந்த விஷியத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே ரஜினிகாந்தின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடைய படங்கள் அனைத்தும் நல்ல படங்களாக இருக்கும்.

Advertisement

13 வயதில் பாடினேன் :

ஒரு வேளை இதனை கடவுள் உருவாக்கி இருந்திருக்கலாம். அந்த பாடலை என்னுடைய 13 மற்றும் 14 வயதில் பாடினேன் என்று நினைக்கிறன். சரியாக தெரியவில்லை என்னுடைய அப்பா படுவதற்கு அழைத்தார் நான் எனக்கு பரிட்சை இருக்கிறது எனவே என்னால் வரமுடியாது என்று கூறி சிறிது நேரத்திலேயே நான் படுவதற்கு வருகிறேன் எனக் கூறினேன். நான் இதனை நினைத்து கூட பார்க்கவில்லை ஒரு சிறிய பகுதி பாடியதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்றும்.

Advertisement

பங்களிப்பு தான் முக்கியம் :

அதன் பிறகுதான் எனக்கு தெரிந்தது இரண்டு வரி பாடினாலும் நம்முடைய உழைப்பு இருந்தால் பெரிய பகுதியை பாடாமல் இருந்தாலும் கூட கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தது. ஏனென்றால் நான் பாடிய பாடல்கள் அதிகம் சில முக்கியமாக பகுதிகளை மட்டுமே பாடியிருக்கிறேன். அப்போதுதான் தெரிந்தது எவ்வளவு பாடுகிறோம் என்பது முக்கியம் கிடையாது நம்முடைய பாக்களிப்புதான் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறினார் ஏ ஆர் ரகுமானின் மகன் கதீஜா ரகுமான்.

Advertisement