ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் - இத்தனை மடங்கு இழப்பீடு தரணுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Arun · 6/5/2024

சமீபத்தில் சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான் பூதாகரம்பாக வெடித்து இருந்தது. உலக முழுவதும் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

https://twitter.com/tamiltalkies/status/1701640119411958256

தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பின் சென்னை பனையூரில் ஏற்பட்டு ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். பின் மீண்டும் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

https://twitter.com/AjayTweets07/status/1701092365623242764

அப்போது சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். பணம் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்தது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருந்தார்கள். ஏ ஆர் ரஹம்சன் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து இருந்தார்கள். ஆனால், இதற்கு முழுக்க முழுக்க கரணம், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது.

ரசிகர் போட்ட வழக்கு:

இந்த நிலையில் சென்னையில் இசை கச்சேரியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். இதற்காக இவர் 12,000 ரூபாய் செலுத்தி டிக்கெட் வாங்கி இருக்கிறார். ஆனால், மழை காரணமாக இசைக்கச்சேரி வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது அவரால் வர முடியவில்லை. பின் தன்னுடைய பணத்தை கேட்டு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், மாற்றி வைக்கப்பட்ட தேதியில் என்னால் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=AzR2mCAIcjc

நீதிபதி உத்தரவு:

இதனால் டிக்கெட்காக செலுத்திய தொகையை திருப்பி தர வேண்டும் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், அவர்கள் பணத்தை திரும்பி தருவதாக சொல்லி தரவே இல்லை. இதனால் என்னுடைய பணத்தை மீட்டுத் தாருங்கள் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இசை கச்சேரியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனம் மனுதாரர் கொடுத்த டிக்கெட் தொகை 12000, இழப்பீடு 50,000, செலவு தொகை 5000 என மொத்தம் 67 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full