காட்டுத் தீயை விட வேகமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. சொல்லபோனால் மொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் தான் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1965 பேர் பாதிக்கப்பட்டும், 41 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.

மேலும், பல பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய உயிரை பணய வைத்து இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இரவு, பகல், நேரம்,காலம் என்று பார்க்காமல் உழைத்து வரும் மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர், அரசாங்கம் என்று பலரையும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

தன்னலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல தான் இந்த டீவ்ட். இந்த கொடிய வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடி வருகிறார்கள். இந்த சமயத்தில் அவர்கள் கொரோனா வைரஸை எதிர்த்து இவ்வளவு தயாராக போராடுவதை பார்த்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

Advertisement

இப்படிப்பட்ட தருணத்தில் நாம் அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து கண்ணுக்கு தெரியாத உயிர் கொல்லி கிருமியை எதிர்த்து போராடுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றை எல்லாம் தற்போது செயலில் காண்பிக்கும் தருணம். அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்வோம்.

Advertisement

கடவுள் எங்கும் இல்லை உங்கள் இடத்தில் தான் இருக்கிறார். உங்கள் மனம் தான் பரிசுத்தமான கோயில். இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமில்லை. அரசு சொல்லும் அறிவுரையைக் கேட்டு அதன் படி நடங்கள். வீட்டுக்குள் அனைவரும் பாதுகாப்பாக சில நாட்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும்.

இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். கொரோனா உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சோசியல் மீடியாவில் வரும் புரளிகளைப் பார்த்து பதட்டம் மற்றும் கவலை கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

Advertisement