மைக்கேல் ஜாக்சன் அழைத்தும், என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன் - ஏ.ஆர்.ரஹ்மானே சொன்ன விஷயம்

By Rajkumar · 12/7/2024

தமிழ் சினிமாவின் இசை புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மைக்கேல் ஜாக்சன் குறித்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உண்டாம். மேலும் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' என்ற திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் அதுவே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டுத்தொட்டி எங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து:

அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது தொடங்கி ஆஸ்கார் மற்றும் கிராமிய விருதுகளையும் சர்வதேச அளவில் வாங்கி தனக்கான அங்கீகாரத்தை பல இடங்களில் தடம் பதித்துள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தில் ரஹ்மானின் பாடல்கள் வெளியாகியிருந்தது. ஆரம்பத்தில் அப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு சுமாராக இருந்தாலும், மெல்ல மெல்ல ரசிகர்கள் கேட்க தொடங்கியதுடன் தற்போது பலரின் பிளே லிஸ்ட்டையும் பாடல்கள் ஆக்கிரமித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி:

இதனிடையே மறைந்த பிரபலமான மைக்கேல் ஜாக்சன் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தகவல் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், நான் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தேன். அப்போது என்னுடன் இருந்தவரின் நண்பர், நான் மைக்கேல் ஜாக்சன் மேனேஜர் என்று கூறினார். அப்போது அவரிடம் நான், மைக்கேல் ஜாக்சனை பார்க்க முடியுமா என்று ஜாலியாக கேட்டேன். அதற்கு அவரும் நிச்சயமாக நான் அவருக்கு மெயில் அனுப்புகிறேன் என்று கூறினார். ஆனால் ஒரு வாரமாக எந்த பதிலும் வரவில்லை என அந்த விஷயத்தை மறந்து விட்டேன்.

மைக்கேல் ஜாக்சன் குறித்து ரஹ்மான்:

அதன் பின்னர், அதே ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கு என்னை பரிந்துரை செய்யப்பட்டபோது எனக்கு மெயில் ஒன்று வந்தது. அதில் மைக்கேல் ஜாக்சன் என்னை பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு நான், ஒருவேளை ஆஸ்கார் விருதை நான் வென்றால் அவரை சந்திக்கிறேன், இல்லையென்றால் சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் எனக்கு ஒரு ஆஸ்கார் விருதையாவது வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குப் பிறகு 'ஆஸ்கார் விருது' வென்ற மறுநாளே மைக்கேல் ஜாக்சனை அவருடைய வீட்டில் சந்தித்தேன்.

https://www.youtube.com/watch?v=ayYsbsNatQI

'எந்திரன்' படத்தில் மைக்கேல் ஜாக்சன் :

அந்த நேரத்தில் நானும் உலகத்திலேயே டாப் இடத்தில் இருந்ததுடன், அவரைப் பார்க்கும் ஒரு சிறந்த தருணமாக அது இருந்ததாக உணர்ந்தேன். இருவரும் பல விஷயங்களை பேசிக்கொண்டோம். என்னுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று மைக்கேல் ஜாக்சன் விரும்பியதால், 'எந்திரன்' திரைப்படத்தில் பாட வைக்கலாம் என்று நினைத்தேன். அதற்கு அவரும் சம்மதம் சொல்ல, அதற்கிடையே துரதிஷ்டவசமாக அவர் மறந்து போனார் என்று ரகுமான் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full