தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைஞர்களின் வாய்ப்பை பறிக்கிறேனா? - ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதில்

By subhashini · 16/4/2025

AI தொழில்நுட்பம் தொடர்பாக தன்னை குறித்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.
தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படி இருக்கும் நிலையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ.ஆர் ரகுமான் இசைக் கலைஞர்களுடைய வாய்ப்பைப் பறிக்கிறார் என்ற சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது,
நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடனே கற்றுக்கொண்டு அதை பயன்படுத்துவதில் ஏ.ஆர் ரகுமான் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஏ ஆர் ரகுமான் குறித்த சர்ச்சை:

இசைத்துறையில் புதிதாக வரும் தொழில்நுட்பத்தை அவர் ஸ்டுடியோவில் வாங்கி வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லால் சலாம் படத்தில் மறைந்த சாகுல் ஹமீது குரலில் பாடல் உருவாக்கி இருந்தார். இது அனைவரும் அறிந்ததே. இதற்கு ஒரு தரப்பினர் பாராட்டி இருந்தாலும், இன்னொரு தரப்பினர் பாடகர்களுடைய வாய்ப்பு பறிபோகிறது என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் மறைந்த பாடகர்களை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தாமல் புதிய படங்களுக்கு வாய்ப்பு தரலாம் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

AI தொழில்நுட்பம்:

இது தொடர்பாக கூட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டியில், பாடகர்கள் இவ்வளவு பேர் இங்கு இருக்கும்போது நான் ஏன் AI பயன்படுத்தி பாடலை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து பாலிவுட் பாடகர் அபிஜித், ஏ ஆர் ரகுமான் பாடகர்களுக்கும் இசைக்கருவிகளை வாசிப்பவர்களுக்கும் பதிலாக தொழில்நுட்பத்தை வைத்து இசையமைத்து வாய்ப்புகளை பறிக்கிறார் என்று நேரடியாகவே ஏ.ஆர் ரகுமானை தாக்கி பேசி இருந்தார்.

ஏ ஆர் ரகுமான் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ.ஆர் ரகுமான், பாடகர் அபிஜித் உடன் எனக்கு நல்ல நட்புதான் இருக்கிறது. அவருக்கு நான் கேக் கூட அனுப்பி இருக்கிறேன். இன்னும் அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது. அது அவருடைய கருத்து. ஆனால், நான் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக தான் பயன்படுத்துகிறேன். பாடகர் உடைய திறமையான குரல் நுட்பங்களை AI செய்ய முடியாது. நான் சமீபத்தில் துபாயில் 60 பெண்கள் கொண்ட ஒரு பெரிய இசைக் குழுவை அமைத்திருக்கிறேன். பொன்னியின் செல்வன், சாவே படங்களில் எல்லாம் 200, 300 இசை கலைஞர்களை வைத்து இசை அமைத்தேன். ஒரு சில பாடல்களில் 100 இசை கலைஞர்களை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறேன். இப்படி பலருக்குமே நிறைய வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதை வெளியில் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார் .

Tamil Behind Talkies AMP · Quick view
View full