'சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே'- அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் களம் இறங்கி இருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தல் நாள் நெருங்கும் சூழலில், தற்போது இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த தேர்தலில் திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உட்பட பலர் தங்களது ஆதரவை டிரம்ப் மற்றும் கமலாவுக்கு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல், பிரபல இசை அமைப்பாளர் கிட் ராக், மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், ராப் பாடகர் ஆம்பர் ரோஸ் உட்பட பலர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
தேர்தலில் கமலா ஹாரிஸ்:
அதேபோல், பிரபல பாடகிகள் டெய்லர் ஸ்விப்ட், பியான்ஸே, கேட்டி பெப்ரி, ஆஸ்கார் விருது வென்ற பாடகி கில்லி ஜலிஷ், அவரது சகோதரர் பின்னியாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கமலாவுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது இதனால் அமெரிக்கா தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் களம் இறங்கியுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் இசை கச்சேரி:
அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் நிகழ்ச்சியில் இந்திய இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாக உள்ளதாம். ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவு வாசிகளின் வெற்றி அமைப்பான ஏ ஏ பி ஐ இது தொடர்பான அறிவிப்பையும் டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிஸை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ஏ ஆர் ரஹ்மான் ஆவார்.
ஏஆர் ரஹ்மான் வீடியோ:
அதாவது ஏஆர் ரஹ்மான், கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக 30 நிமிட இசைக் கச்சேரி வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ஏஆர் ரஹமானின் புகழ்பெற்ற சில பாடல்கள், அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதலாவது கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை பெற்றுள்ள கமலா ஹாரிஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடல் வீடியோ சமீபத்தில் youtube-ல் வெளியாகி உள்ளது. அதில், ஒரு தெற்காசிய தமிழனாக உலகத்தை சிறந்த இடமாக மாற்ற கமலா ஹாரிஸ் முயற்சி செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=FJ7uRqSBxCA
ஏஆர் ரஹ்மான் பேசியது:
அவரின் அர்பணிப்பை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதோடு முதல் பெண் அதிபரை பார்க்க இருக்கிறோம். அவர் எங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரி' என்று கமலா ஹாரிஸ் குறித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இசை அமைத்த பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். அதில், 'ஜெய் ஹோ', 'சிங்க பெண்ணே' பல பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் களம் இறங்கியது அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.