வேறுபாடுகளை தன் இசையில் ஒன்றாக காட்டிய இசைஞானி - ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ
தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத உயிர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது. பின் சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றி இருந்தார்.
இளையராஜா பாராட்டு விழா:
சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருந்தார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவிற்கு மாபெரும் பாராட்டு விழாவை தமிழக அரசு ஏற்பாடு செய்து இருந்தது. இளையராஜாவின் இசை பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக அரச சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று இருந்தது.
https://www.youtube.com/watch?v=NZ6bnBrahtE
ஏ.ஆர்.ரகுமான் பதிவு:
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் இளையராஜா, முதல்வர் ஸ்டாலின், கமலஹாசன், ரஜினி பேசிய விஷயங்கள் எல்லாம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாராட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமில்லை தமிழ் நாட்டுக்கு தனி பெருமை தேடித்தந்தவர் இசைஞானி. இவர் ஹிமாலய சாதனையையும் எளிமையும் ஒருங்கமைத்த மாமனிதர்.
சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா- இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பதிவு #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @arrahman pic.twitter.com/FOpB35LrJM
— TN DIPR (@TNDIPRNEWS) September 14, 2025
இளையராஜா பற்றி சொன்னது:
சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கும் உள்ள வேறுபாடுகளை தன்னுடைய இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை இளையராஜா. குறிப்பாக ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்க கூடிய சாதனையாக இருக்கிறது. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கு எடுத்துக் கொள்வதில் உங்களைப் போல நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழ்நாடு அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி இருக்கிறார்.