ரோஜா படத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து வெளியேற நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான் - அவரே சொன்ன காரணம்

By Rajkumar · 15/6/2024

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹமான், ரோஜா படத்திற்கு பின் இசை துறையை விட்டு வெளியேற நினைத்தேன் என்று பேட்டியில் சொன்ன செய்தி தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. இசைப்புயல், "மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ ஆர் ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23 வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய அப்பா பெயர் ஆர் கே சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். அது மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் மிக அதிகம் ஆர்வம் உடையவர்.

மேலும் இவர் சிறு வயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான 'வொண்டர் பலூன்' என்ற நிகழ்ச்சி ஒரே நேரத்தில் 4 கீ போர்ட்களை வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதுதான் சிறு வயது கணவாம். ஆனால் இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்.பின் பல இசை கலைஞர்களிடம் பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் இசையமைத்த முதல் படம் 'ரோஜா' ஆகும்.

ஏ ஆர் ரகுமான் பேட்டி:

சமீபத்தில் கேம்ஸ் திரைப்பட விழாவில் இசை மறுமலர்ச்சி குறித்து ஏ ஆர் ரகுமான் தயாரித்த ஆவண படமான 'ஹெட்ஹண்டிங் டு பீட் பாக்ஸிங் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாகலாந்தில் வெளியிட்டு முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஆவண படங்களில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு, பல்வேறு இசைப் பணிகள் உன் மீதான அவர் தீராத ஆர்வம் மற்றும் எங்கே இசையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவரது விருப்பம் பட்டு எல்லாம் பேசி இருந்தார்.

ரோஜா படம்:

அதனைத் தொடர்ந்து ரோஜா படம் எடுப்பதற்கு முன்பு காஷ்மீர் சென்று இருக்கீர்களா என்ற கேள்விக்கு, இல்லை அது பாதுகாப்பான இடம் இல்லை என்று கூறினார்கள் என்றும் ரோஜா படம் இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியது என்றும் கூறினார். மேலும் ரோஜா படம் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அதுவே என்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் என்னால் முடிந்ததை செய்து விட்டு அந்த படத்தில் இருந்து வெளியேற விரும்பினேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இசையிலிருந்து வெளியேற நினைத்த காரணம்:

அதை தொடர்ந்து பேசியவர், இதை முன்பே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அந்த நேரத்தில் சினிமா துறை வேறு விதத்தில் இருந்தது. அது பழைய பாணி, பழைய பள்ளி. அந்த சமயத்தில் விளம்பர துறை புதிதாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இந்த ஒரு படத்தை நான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், ஏனென்றால் நான் 1982 முதல் விளம்பரத் துறையில் இருந்தேன். ஆனால் பின்னர் பல விஷயங்கள் மாறியது, நான் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பேன் என்று எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.

மாற்றம் ஏற்பட காரணம்:

மேலும் நானும். மணிரத்னம் சாரும் எல்லாவற்றையும் மாற்றினோம்.. மேல் நாடுகளின் கருத்துக்கள் இசையமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம், நாம் இசையை உருவாக்கிய விதம். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதான் என்னையும் மாற்றியது என்றார். அந்த நேரத்தில் ஹிந்துஸ்தானி இசையின் மீது எனக்கு இருந்த ஈடுபாடு கர்நாடக இசையை விட அதிகமாக இருந்தது. அப்போதுதான் நான் வட இந்திய ராகங்களின் அழகைக் கண்டேன் என்று தனது ரோஜா அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் ஏ ஆர் ரகுமான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full