நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பல லட்சத்துக்கு விற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் ஆடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பரவி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். சினிமா உலகில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் ஏ ஆர் ரஹமான் திகழ்ந்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர்.

Advertisement

ஆஸ்கர் நாயகன்:

அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் என பாடல்களை கொடுத்துள்ளார்.

ஏ ஆர் இசை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார்.

Advertisement

ராஜஸ்தான் காஸ்மோ க்ளப் அறக்ககட்டளை:

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் ஏ ஆர் ரகுமானின் ஆடை பல லட்சத்துக்கு விற்று உள்ளதாம். அது என்னவென்றால், ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ க்ளப் அறக்ககட்டளையில் 28ஆம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு கொடுத்து உதவும் திட்டத்தில் ஏ ஆர் ரகுமான் பயன்படுத்திய ஆடை விற்கப்பட்டது.

Advertisement

ஏ.ஆர்.ரகுமானின் ஆடை விலை:

அப்போது ஏ.ஆர்.ரகுமானின் ஆடை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அது வெள்ளி நிற ஆடை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதை பிரமோத் சுரடியா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார். இதனால் அந்த அறக்கட்டளைக்கு இந்த பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதவற்றோருக்கு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மானுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறிய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement