சைந்தவி திரும்ப வீட்டுக்கு வா, அவங்கள நான் பிரிக்கல- எமோசனலாக ஜி.வி.பிரகாஷ் அம்மா சொன்ன விஷயம்
ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்து ஏ.ஆர். ரெய்ஹானா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமணம்:
கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் நடித்தும், இசை அமைத்தும், பாடியும் வருகிறார். இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
ஜிவி பிரகாஷ் பிரிவு:
சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜிவி பிரகாஷின் தாய் ஏ.ஆர். ரெய்ஹானா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், விவாகரத்துக்கு சூழ்நிலை என்னவோ, ரொம்ப வருத்தமான விஷயம் தான். வேணும் என்றே யாராவது பிரிவாரா? சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது.
https://www.youtube.com/watch?v=cO16kn26AGM&t=549s
ஏ.ஆர். ரெய்ஹானா பேட்டி:
சைந்தவி நல்ல பொண்ணு தான். என் பையனும் முடிந்த அளவுக்கு அட்ஜஸ்ட் பண்ணி இருக்கிறான். இது கடவுளால் உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன நடந்தது என்றும் எனக்கு தெரியாது. அவர்களுடைய விருப்பத்திலும், முடிவிலும் நான் தலையிட முடியாது. மீண்டும் சைந்தவி வரணும் என்றுதான் நினைக்கிறேன். இதைப் பற்றி நான் என் மகனிடம் பேசினேன். ஆனால், அவன் சொன்ன காரணங்களை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. அவங்களை நான் கட்டாயப்படுத்தவும் முடியாது. அது அவர்களுடைய வாழ்க்கை. என்ன நடக்கணும் என்று நான் கடவுளிடம் விட்டுவிட்டேன்.
ஜிவி பிரகாஷ்-சைந்தவி குறித்து சொன்னது:
அவர்கள் சேரனும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவங்க சேர்ந்து இருக்கும் போது பிரிக்கணும் என்று நினைத்தால் முடியுமா? சேராதே என்று சொன்னால் முடியுமா? சோசியல் மீடியாவில் நிறைய பேர் இவர்களுடைய பிரிவிற்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். நான் திமிரு புடிச்சவள் கிடையாது. அவர்கள் பிரிந்ததற்கு நான் காரணமும் கிடையாது என்று கூறி இருக்கிறார்.