ரோபோ சங்கர் பற்றி அத ஏன் பேசவில்லை - அறந்தாங்கி நிஷா போட்ட போஸ்ட் - பின்னணி இது தான்

By subhashini · 23/9/2025

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.

https://www.youtube.com/watch?v=ItTXW7pmhnc

இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார்.

ரோபோ சங்கர் இறப்பு:

சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங்கில் மயங்கி கீழே விழுந்திருந்தார். இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=8-sm7LgmcD4

அறந்தாங்கி நிஷா பதிவு:

மேலும், ரோபோ சங்கர் உடைய இறுதி ஊர்வலத்தில் அவருடைய மனைவி பிரியங்கா நடனமாடி வழி அனுப்பி இருந்தார். இதை பார்த்த பலர் விமர்சித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாக பிரபலங்கள் பலர் ப்ரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கருடன் பணியாற்றியவரும் நகைச்சுவை நடிகையுமான அறந்தாங்கி நிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒருத்தர் தவறி விட்டால், அவரைப் பற்றி நல்லது மட்டும் பகிர்ந்து போவதுதான் மனிதனுக்கு அழகு.

View this post on Instagram

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

விமர்சனங்களுக்கு பதிலடி:

தன்னோட கணவன் இறப்பில் அந்த பெண் ஆடுனது தவறா? இல்லை ஒரு பெண் ஆடினதே தவறா?, காதலை எப்படி வேணாலும் வெளிப்படுத்தலாம் ஆனால் வருத்தத்தை அவ இப்படி வெளிப்படுத்தினது எனக்கு தவறா தெரியல. காரணம், அவங்க காதலிச்ச மேடையே ஒரு நடன மேடைதான். அந்த இறுதி பயணத்தில் தன் காதலோடு சேர்த்து தன்னுடைய நடனத்தையும் அவருக்காக கொடுத்தது என்ன பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல காதலுக்கு அழகு. எப்பவும் உங்களை குண்டு பையன் குண்டு பையன் சொல்லி.. ரோபோ உங்க நினைவுகளோடு உங்க குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full