அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படி ஓரு ஆசையா ? நடிகர் வடிவேலுதான் இதற்கு தீர்வு !

By Ajju · 8/2/2018
விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா தனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார் என கூறியுள்ளார். விஜய் டீவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி மூலம் பிரபலம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. இவருக்கு ஜாம்பவான் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலுவை பார்க்க வேண்டுமாம். அதுதான் அவரது வாழ்நாள் ஆசை எனவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் வடிவேலு தான் எனவும் கூறியுள்ளார். நிஷா தற்போது சின்னதிரையை தாண்டி, பெரிய திரைக்கும் ஆதி எடுத்து வைத்துள்ளார். தனுசின் மாறி-2, கலகலப்பு - 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் நிஷா. மேலும் விஷாலின் இரும்புத்திரை படத்திலும் நடித்துள்ளார் நிஷா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full