சென்னையில் சொந்தமாக வீடு வாங்க இது தான் காரணம் - ஆதங்கத்தில் அறந்தாங்கி நிஷா சொன்ன விஷயம்
அறந்தாங்கி நிஷா புதிதாக வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக் கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்ற நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்து கொண்டு பிரபலமானவர். காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் 4ல் நிஷா:
இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சமியுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர்.
நிஷா குறித்த தகவல்:
அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது. பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். காலப்போக்கில் அந்த விமர்சனம் மறைந்தது. இதை அடுத்து நிஷா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
சொந்த வீடு வாங்கிய நிஷா:
அதோடு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அறந்தாங்கி நிஷா புதிதாக வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருடைய சொந்த ஊரிலேயே இவருக்கு வீடு இருக்கிறது. தற்போது இவர் சென்னையில் தான் வீடு வாங்கி இருக்கிறார். காரணம், இவர் வேலைக்காக சென்னை வந்த போது வாடகை வீடு தேடி அலைந்து இருந்தார். அப்போது சினிமாவில் இருப்பவர்களுக்கெல்லாம் வீடு தர முடியாது,முஸ்லிம் என்றாலே வீடு தர மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்களாம்.
வீடு வாங்க காரணம்:
இதையெல்லாம் மனதில் வைராக்கியமாக வைத்துக் கொண்டு தான் அறந்தாங்கி நிஷா கடுமையாக சினிமாவில் மீடியாவில் உழைத்து இருக்கிறார். தற்போது இவர் சொந்தமாகவே சென்னையில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். இது பெரிய பங்களா இல்லை. 1 BHK வீடு தான் வாங்கி இருக்கிறார். தன்னுடைய புது வீட்டிற்கு பால் காய்ச்சி நிஷா குடியேறி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அறந்தாங்கி நிஷா பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அறந்தாங்கி நிஷாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.