ஒரு கறிக்கடை காரரின் பொண்ணு, இஸ்லாமை பொண்ணா இருந்தாலும்- தனது தந்தை குறித்து நிஷா நெகிழ்ச்சி

By Rajkumar · 9/9/2024

தனது அப்பா குறித்து அறந்தாங்கி நிஷா, போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக் கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்ற நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்து கொண்டு பிரபலமானவர். காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்:

இந்நிலையில் சமீபத்தில், 9th annual விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நடத்தப்பட்டது. அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு இருந்தது. ஆண்டு தோறும் இந்த விருது வழங்கும் விழாவை விஜய் டிவி நடத்தி வருகிறது. அதில் 'கலக்கப்போவது யாரு சீசன் 4' தொகுத்து வழங்கியதற்காக ட்ரெண்டிங் பேர் அவார்ட் , கேபிஒய் பாலா மற்றும் நிஷாவிற்கு வழங்கப்பட்டது.

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

நிஷா பதிவு :

தற்போது இது குறித்து நிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம், நேத்து எல்லாருமே விஜய் தொலைக்காட்சி நிகழ்வ பார்த்துட்டு நான் அவார்ட் வாங்கியதற்கு வாழ்த்து சொன்னீங்க, முதல்ல உங்க எல்லாருக்கும் நன்றி. இந்த அவார்டு மட்டும் இல்ல நான் மேடைல வாங்குற சின்ன கைதட்டலா இருந்தா கூட அது மொத்தமும் என் அப்பாவுக்கு மட்டுமே போய் சேரும், அறந்தாங்கில ஒரு கறிக்கடைக்காரர் ஓட பொண்ணு தான் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தால் கூட உனக்கு படிப்பு முக்கியம் என்று சொல்லிக் கொடுத்தது என் அப்பா, தைரியமா இருக்கணும் எல்லாத்தையுமே எதிர்கொள்ளனும்னு எங்க அப்பாவை பார்த்து தான் கத்துக்கிட்டேன், 2005 ல தாமரை அண்ணன் தான் என்ன பட்டிமன்றத்துக்கு அறிமுகப்படுத்தினாங்க.

அப்பா குறித்து நிஷா:

அப்பாகிட்ட தான் வந்து முதல்ல பேசினாங்க. சொந்தம் மற்றும் நண்பர்கள் அப்பா கிட்ட அதெல்லாம் அனுப்பாதீங்க ஏதாவது தவறாக போயிரும்னு சொன்னப்போ, அத்தனை பேரும் முன்னாடியும் என் பொண்ணு எந்த தப்பும் பண்ண மாட்டான்னு முழுசா நம்புனது என் அப்பா மட்டும்தான். அவருக்கு இந்த அவார்டு பத்தி எல்லாம் தெரியாது, கொண்டு போய் கொடுக்கும்போது இது எத்தனாவது பரிசுமா அப்படின்னு தான் கேட்டார். மொத்த அன்பையும் பொண்ணுக்காகவே கொடுக்கிற அப்பா பொண்ணு சும்மா இல்லங்க. அவளுக்கு உலகமே அப்பாதான் வறுமையிலும் எங்களுக்கு வறுமைன்னா என்னன்னே தெரியாம வளத்த மனுஷன் நான் என்ன கூட ஏமாத்துவேன். ஆனா, ஒரு நாளும் என் அப்பாவை ஏமாத்த மாட்டேன். யாரு என்ன சொன்னாலும் என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்குனு அடிக்கடி சொல்ற அந்த வார்த்தை இந்த நிமிஷம் வரைக்கும் என்னை எல்லா மேடைகளையும் ஓட வைக்குது.

View this post on Instagram

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

நன்றி தெரிவித்த நிஷா:

கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே ஒரு கனவு இருக்குங்க. நம்ம எங்க இருந்து வர்றோங்கறது முக்கியம் இல்ல, அந்தக் கனவுக்கு நம்ம உண்மையா இருக்குறது தான் முக்கியம், நிறைய கனவு காணுங்கள் அதுக்காக ஓடிக்கிட்டே இருங்க, எந்த விமர்சனங்களுக்கும் காது கொடுக்காதீங்க, சில நேரங்கள்ல நம்ம வெறுக்கிறவங்களை மட்டுமே யோசிக்க ஆரம்பிச்சுடுவோம். ஆனா, நம்மளை நேசிக்கிறவங்க நம்ம பக்கத்திலேயே இருக்காங்க, அந்த இதயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம், இந்த அவார்டை முழுமையா நான் என்னோட அப்பாக்கு கொடுக்கிறேன், அவர் கறி கடையில நாள் முழுக்க நின்ற கஷ்டம் எல்லாம் அவருக்கு இந்த அவார்ட பார்க்கும்போது மறைந்திருக்கும் நம்புறேன், இதுக்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம் தான் என்ன உங்க வீட்டு பிள்ளையா முழுசா ஏத்துக்கிட்டதுக்கு எப்பவுமே நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்…. சொல்ல மறந்துட்டேங்க என் அப்பா பேரு இப்ராஹிம்சா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full