நான் அசிங்கபட்டு போய்யிருப்பேன் - மணி நேரம் தனி ஆளா நின்னு என்ன காப்பாத்தனாரு - நிஷா உருக்கமான பேட்டி.

By Rajkumar · 12/9/2020

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

https://www.facebook.com/behindwoods/videos/362790214732127

இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr &Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அறந்தாங்கி நிஷா பேசுகையில் 'அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது அவர் ஏதோ உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விரைவில் குணமடைந்து வருவார் என்றுதான் நாங்கள் அனைவரும் நம்பினோம்.

அவர் கூட வேலை பார்க்கும் போது உடன் இருப்பவர்களை மிகவும் ஊக்கப்படுத்துவர். ஒரு முறை நானும் வடிவேல் பாலாஜியும் மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்தமானோம். ஆனால், எனக்கு விசா பிரச்னையால் போக முடியவில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் வந்து ஆக வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், அவர் தனியாக அவர் சென்று நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார். அந்த இடத்தில் என் மானத்தை காப்பாத்தினர் வடிவேல் பாலாஜி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full