உண்மையிலேயே திவாகர் இப்படி பட்டவர் தான் - கோபத்தில் குக் வித் கோமாளி நிஷா வெளியிட்ட வீடியோ

By subhashini · 19/4/2026

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர். இவர் ரீல்ஸ் வீடியோ மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சினிமா, நிகழ்ச்சிகள் என்று பிசியாக வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள திவாகர் சென்றிருந்தார்.
அங்கு நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. திவாகர் பேட்டியில், செட்டில் மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் மூன்று பேருமே கானா குடித்துவிட்டு அடித்துவிட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=sD5Eg5iWp_A

புகழுக்கு என்னை பிடிக்கவே இல்லை. அதேபோல் இந்த நிகழ்ச்சியிலும் என்னை தர குறைவாக பேசினார். என்னுடைய குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசியிருந்தார். என்னை ஒரு இரும்பு கம்பியால் காலில் அடித்து விட்டார்கள். அதனால் தான் நான் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை அடுத்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு கானா வினோத், மாகாபா,புகழ் ஆஜரானார்கள். அதற்குப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில், செட்டில் திவாகர் ரொம்ப மோசமாக பெண்களிடம் பேசி இருந்தார்.

திவாகர் புகார்:

அதனால் தான் சேனல் நிர்வாகமே அவரை வெளியே அனுப்பி இருந்தது. விஜய் டிவி சீரியல் நடிகைகளிடமும் முகம் சுழிக்கும் அளவிற்கு அவர் பேசி இருந்தார். அவர் திவாகர் மீது புகார் கொடுத்து நிகழ்ச்சி வந்து நீக்கினார்கள். நிகழ்ச்சியில் ஒரு கணவன் முன்னே அவருடைய மனைவியின் தோள் மீது கை போட்ட திவாகர், இவ்வளவு நாள் அவர் கூட இருந்துட்ட ஒரு நாள் என் கூட இரு என்றெல்லாம் பேசி இருந்தார். ஆபாசமாக பேசுவது ஜாதியை பற்றி பேசுவது என்று மோசமாக நடந்து கொண்டிருக்கிறார.

https://www.youtube.com/watch?v=Ldy2zIwxESU

நிஷா வீடியோ:

இதற்கு எங்களிடம் ஆதாரமும் இருக்கிறது. நாங்கள் யாரையும் குடித்துவிட்டு அடிக்கவில்லை என்று பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் நிஷா வெளியிட்டிருக்கும் வீடியோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்ததை பற்றி திவாகர் சொன்னது அனைத்துமே பொய். திவாகர் எனக்கு தான் கோமாளியாக வந்தார். வந்தவர் என் தோள் மீது கை போட்டு ரொம்ப மோசமாக பேசினார். சுனிதாவிடமும் சுனிதா என்று ரொம்ப கத்தி பேசினார்.

திவாகர் பற்றி சொன்னது:

அதேபோல் அந்த நிகழ்ச்சியில் உள்ள மற்ற பெண்களிடமும் அவர் ரொம்ப மோசமாகவும் அருவருப்பாகவும் நடந்து கொண்டார். இதைப்பற்றி அவர் வெளியே சொல்லவே இல்லை. குறிப்பாக அவர் பெண்கள் இடம் நடந்து கொண்ட விதம் ரொம்பவே தவறானது. மாகாபா ஆனந்த் பற்றி அவர் சொன்ன விஷயம் 100 சதவீதம் பொய். இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும் என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய எல்லா பெண்களும் தயாராக இருக்கிறோம். திவாகர் மீது இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full