தனது 18 வயதில் சொந்த உழைப்பில் புது கார் வாங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா - குவியும் வாழ்த்துக்கள்
தமிழில் 90ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தான் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும், அர்ச்சனாவின் மாபெரும் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. தற்போது வரை அர்ச்சனா, ஜீ தமிழில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார். இதற்கு இடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் அர்ச்சனா கலந்து கொண்டார்.
அர்ச்சனா குறித்த தகவல்:
தொடக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் அன்பு அன்னையாக மாறி இருந்த இவர், கொஞ்ச நாட்களிலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து கொண்டு செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அர்ச்சனா, தனது மகள் மற்றும் தங்கை அனிதாவுடன் இணைந்து யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அர்ச்சனா மகள்:
தற்போது அர்ச்சனா சினிமா, நிகழ்ச்சி என்று பிசியாக இருக்கிறார். மேலும், இவரைப் போலவே இவருடைய மகள் சாராவும் தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப்பின் இவர் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நிகழ்ச்சிகளை எதுவும் தொகுத்து வழங்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சாரா புதிதாக கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாரா வாங்கிய புது கார்:
அதாவது தன்னுடைய 18 வயதிலேயே அர்ச்சனாவின் மகள் சாரா மகேந்திரா பேட்மேன் என்ற காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் உடைய விலை 30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காரை தன்னுடைய சொந்த உழைப்பிலேயே அர்ச்சனாவின் மகள் சாரா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து