பிக்பாஸில் அடிதட, நடிகரை தாக்கிய நடிகை - Red Card கொடுத்து வெளியேற்றம். இதோ வீடியோ.

By Ajju · 11/11/2022

கடந்த மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டையும் சச்சரவும் நடந்து வருகிறது. கிட்டதட்ட ஒருவரை ஒருவர் கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சண்டையானது முத்தியுள்ளது. நேற்று கூட மணிகண்டன் டாஸ்கின் போது செய்த செயலினால் அமுதவாணனுக்கு அடிபட்டது பின்னர் மணிகண்டன் அமுதவாணனிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர் தற்போது தனலட்சிமிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான வீக்கமனுடன் கருத்து வேறுபாடுகள் நடந்தது. இப்படி பிக் பாஸில் சண்டை இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம்.

https://twitter.com/archanagautamm/status/1590970105667948544

இந்நிலையில்தான் மற்றொரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பவம் ஓன்று நடந்துள்ளது. தற்போது தமிழ் மொழியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழிச்சியை போலவே இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி , மராத்தி ,பெங்காலி என 7 மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளின் முன்னோடிதான் ஹிந்தி பிக் பாஸ் ஹிந்தி பிக் பாஸ் கடந்த 2006ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 16சீசன் நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுக்கு அளவே இல்லை.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லாத நபர்களை போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தி டி.ஆர்.பியை எகிற வைத்து வருகிறது. ஹிந்தி மொழியில் ஒளிபரப்படடும் பாலிவுட் பிக் பாஸ் சீசன் 16ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சஜித் கானை பிக் பாஸ் நிகழிச்சியில் கலந்து கொண்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

https://twitter.com/FamNikki/status/1590392497179865089

மேலும், அவரை உடனடியாக வெளியே அனுப்பக்கோரி டெல்லி மகளிர் ஆணையதிலிருந்து கடிதமானது எழுதப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 10 பெண்களிடம் தகாதவாறு நடந்து கொண்டதாக வழக்குகள் இந்தன. இப்படிப்பட்ட ஒருவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுமதிக்கலாமா என பலரும் கண்டனம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மற்றோரு பிரச்னை ஹிந்தி பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது. ஹிந்தி பிக் பாஸ் சீசன்16ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் தான் அர்ச்சனா மற்றும் ஷிவ் தாக்கரே. இவரகள் இருவருக்கும் தான் பிரச்னை ஒரு சிறிய டிஷ்யூ பேப்பரில் இருந்து ஆரம்பித்தது.

அதுவும் இவர்களுக்கு டிஷ்யூ பாக்ஸ் மற்றும் சர்க்கரையை மறைத்ததற்காக அர்ச்சனாவை டினா, நிம்ரித் கண்டித்துள்ளார், பதிலுக்கு அர்ச்சனா அங்கு நின்ற பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இது ஷிவ் தாக்கரேவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பிரச்சினையைத் தொடர்ந்து ஷிவ் மற்றும் அர்ச்சனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அர்ச்சனா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும்படி ஷிவ் கேட்டபோது, ​​அர்ச்சனா அவனிடம் பேசவில்லை என்று சொல்லி விலக முயன்ற்றார்.

https://twitter.com/ColorsTV/status/1591035510713069569

இதனையடுத்து கோவமடைந்த ஷிவ் அர்ச்சனாவை பற்றி "தீதி கோ படனா ஹை" என்று ஒரு கருத்தைச் சொன்னார் இதனால் கோவமடைந்த அர்ச்சனா ஷிவ்வின் கழுத்தை நெருக்கி நகங்களால் கிறினார் இதனால் காயமடைந்த ஷிவ் தற்போது உடல் நலக் குறைவின் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தான் ஷிவ் தாக்கரேவுன் அமைதியாக இருந்ததை மற்றவர்கள் பாராட்டினார். ஆனால் இன்னும் சிலர் ஷிவ் தாக்கரே தகாதவாரு அர்ச்சனாவிடம் நடந்து கொண்டதால் தான் அர்ச்சனா கெளதம் தாக்கியுள்ளார் என்று கூறுகின்றனர். தற்போது இந்த டாபிக் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full