எனக்கு இந்த வாய்ப்புக்கு காரணம் இவர் தான் - தக் லைஃப் பட நடிகர் அர்ஜூன் சிதம்பரம் எஸ்க்குளுசிவ்
கமல்-மணிரத்தினம் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் தாதா கேக்கில் ஒருவராக நடித்திருப்பவர் தான் அர்ஜுன் சிதம்பரம். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு இவர் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.
அதற்குப்பின் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தார். தற்போது தக் லைப் படத்திலும் அர்ஜுன் சிதம்பரம் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அர்ஜுன் சிதம்பரம், நான் இப்போது ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறேன். தக் லைப் மாதிரியான படத்தில் நடித்ததை நான் பெரும் பெரிய சாதனையாக பார்க்கிறேன். 13 வருடமாக நான் சினிமாவில் இருக்கிறேன். இந்த வாய்ப்பு என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர வைக்கிறது.
அர்ஜுன் சிதம்பரம் பேட்டி:
இத்தனை வருடம் ஆக நான் சினிமாவை இறுக்கமாக பிடித்து இருக்கிறேன். சினிமாவும் என்னை இறுக்கமாக பிடித்திருக்கிறது. நான் ஏழு வருடம் ஆக மணி சார் படத்தில் நடிப்பதற்கு முயற்சி பண்ணிக் கொண்டிருந்தேன். ஓ காதல் கண்மணி படத்திலிருந்து முயற்சி செய்கிறேன். பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு சார் பண்ண கதாபாத்திரத்துக்கு நான் ஆடிசனில் கலந்திருந்தேன். அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு நான் ஆடிஷன் போனேன்.
தக் லைப் பற்றி சொன்னது:
கடைசியில் தான் எனக்கு வரகுணன் கதாபாத்திரம் கிடைத்தது. பொன்னியின் செல்வன் முடிந்த பிறகு மணி சார் கூடவே டச்சில் இருந்தேன். இந்த படத்தில் முதலில் உதவி இயக்குனராக வரேன் என்று சொல்லி தான் கேட்டேன். அப்போ மணி சார், டைரக்ஷன் கத்துக்கணும் என்றால் ஷார்ட் பிலிம் பண்ணு என்று சொன்னார். தக் லைப் படம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் படத்துக்குள் நான் வந்தேன். முக்கியமாக அந்த கதாபாத்திரம் எவ்வளவு நேர்மையாக இருக்கணும் என்று சொன்னார்கள். எல்லோருமே சொன்னது போல் இவ்வளவு நடிகர்களுடன் நடிக்கும்போது எனக்கு தயக்கமாக இருந்தது.
கமல் பற்றி சொன்னது:
நான் கமல் சார் கூட நடிக்கும் போது ஒரு காட்சியில் ஒரு வசனத்தையே விட்டுட்டேன். அந்த சமயத்தில் கமல் சார் எனக்கு ஹிண்ட் கொடுத்தார். இன்டெர்வல் காட்சி எடுக்கும் போது தான் கமல் சார் கூட பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவருடைய ரசிகன். அதே போல அவருடைய சிந்தனைகளுக்கும் நான் ரசிகன். அன்பே சிவம், ஆளவந்தான், வசூல்ராஜா போன்ற படங்களெல்லாம் எனக்குள் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல் சாரிடமும், சிம்பு சாரிடமும் முதல் நாளே போய் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்ற விஷயத்தை தெரிவித்து சொன்னேன். இதையெல்லாம் தாண்டி எனக்கு மணி சாரை பார்த்து தான் பயம். குரு கிட்ட ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும். அதுதான் மணி சாரிடமும் இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
சினிமா வாய்ப்புக்கு காரணம்:
ஆக்டர்ஸ் ஹாண்ட் புக் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதை மணி சார் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரம் பற்றிய அனைத்து விஷயங்களை அந்த புக்கில் நோட் பண்ணி வைக்கணும் என்று சொல்லிக் கொடுத்தார். அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு உள்ளே ஆழமாக இறங்குவதற்கு உதவியாக இருந்தது. இந்த படத்தில் எனக்கு இன்னொரு முக்கியமான விஷயம் நாசர் சார் தினமும் எனக்கு கம்பெனி கொடுப்பார். அவர் சார் அறிவார்ந்தவர். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு காரணம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷர்தா ஶ்ரீநாதுக்கு கிருத்திகா நெல்சன் தான் டப் பண்ணி இருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராகவும் அவர் வேலை செய்தார். அவர் மூலம் தான் மணி சாரை சந்தித்தேன். என்னைக்கும் நான் எச். வினோத் சாருக்கு நான் நன்றி சொல்லுவேன். அவர் மூலம் தான் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது என்று கூறி இருக்கிறார்.